பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ரசக்ஞானி தொண்டைமான்

ரா. ஜகத்ரட்சகன்

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ஒரு சிறந்த ரசக் ஞானி. இந்த ரசக் ஞானியின் கையைப் பிடித்துக்கொண்டு, தல யாத்திரையைத் தொடங்கலாம். வேங்கடத்திலிருந்து நம்முடைய தற்கால நிலைமையையும், உள்ளப் பாங்கையும் அறிந்து வைத்திருக்கிறார். கடன் வாங்கிக் கல்யாணம் என்று துவங்கி, அந்தக் கல்யாணம் முடிந்த பின்னர், வட்டியும் முதலும் கொடுக்காத வேங்கடவனைக் காட்டுகிறார். ஒரு பகுத்தறிவாளருடன் சென்று, கழுகு தொழு வேதகிரி யானையும், லியோ டால்ஸ்டாயின் கதையோடு, அம்பர் மாகாளத்தான்ையும், கிரேக்க இலக்கியத்தின் டயோஜனிஸ் வரலாற்றோடு ஆரூர் தியாகராஜனையும், பெதிக் லாரன்ஸ் பெயர் அமைந்ததைக் காட்டி, மாதிருக்கும் பாதியனையும், இப்படியாக, பாலாற்றங்க்ரை, காவிரிக்க்ரை இருமருங்கும், பிறகு பொருநை தாண்டி குமரி வரை உள்ள தலங்கள் அத்தனையும் காட்டுவார்.

இவரது சிறந்த தொண்டினை, அவரது “கல்லும் சொல்லாதோ கவி’ என்ற நூலில் காணலாம். கல்லை எப்படி எல்லாம் காட்டுகிறார். அவரது காமிராவாலும், சொல்லாலும் கல் பேசுகிறது. கதை சொல்கிறது. ஏன் சங்கீதமே பாடுகிறது. கல்லிலே கவி, காவியம், கற்பனை, சித்திரம், நாணம், காதல், கனல், புலவி என்று அத்தனையையும் காட்டுகிறார் இந்த ரசக்ஞானி.