பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்




சோழர், பாண்டியர், சேரர் ஆகிய மூவேந்தர்களும், தொண்டை நாட்டு அரசனுக்கு எல்லாவிதத்திலும் துணைபுரிந்து வந்தார்கள். அவனுடைய தயவை சதா எதிர்பார்த்தவர்களாய் இருந்தார்கள். இனி -

அரசர்களுக்குக் கொடிகள் உண்டு. அவரவர்களுடைய கொடிகளுக்கான சின்னங்களும் வேறு வேறாக உண்டு.

சோழனுக்குத் திருவாத்தி மரம் (தாதகி) கொடியில் எழுத வேண்டிய சின்னம். பாண்டியனுக்கு வேப்பமரம், சேரனுக்குப் பனைமரம், தொண்டை நாட்டரசனுக்கு, வேலியில் படருகிற தொண்டைக் கொடிதான். ஆதொண்டை என்றும் சொல்வார்கள் அதை.

ஆனாலும் ஒன்று, படரும் கொடியானாலும் சரி, பெரிய வேப்பமரம் ஆனாலும் சரி. விஷயம் கொடி அல்ல, மரம் அல்ல, கொடிப் படலத்தின் விஸ்தாரந்தான் விஷயம். தொண்டைமானது கொடியின் படல விஸ்தாரமே, அவனுடைய ஆதிக்கத்தைக் காட்டுவது. சேர, சோழ, பாண்டியர்களது கொடிகளின் ஒடுக்கமே, அடங்கியுள்ளார்கள் அவர்கள் என்பதைக் காட்டும்.

தொண்டைமானது கொடி வெகு விசாலமாகப் பரவி நிழலிடுகிறது. மற்றக் கொடிகள் அதன் நிழலின் கீழ் ஆடுகின்றன.

இந்தக் காட்சியைக் கம்பர் பார்த்தார். பாடுகிறார்.

திருவாத்தியில் ஏற்பட்ட மஞ்சள் பூவோடு சிவந்த பூக்களும் தெரிகின்றன, சோழனது வெற்றிப் பிரதாபங்களைக் குறிப்பதற்கு.

வெற்றிபுனை தாதகிக்கும்

பெண்ணைக்கும் வேம்புக்கும்

சுற்றும் பெருநிழலாய்த்

தோன்றுமே, கற்றோர்

திறந்தாங்கும், மன்னு

செகந்தாங்கும் எண்ணில்

அறந்தாங்கும் தொண்டை

அரசு.

மரங்களை வைத்து அழகாய் ஜோடித்திருக்கிறது, தொண்டைமானது புகழ். அற்புதமான நடன ஜதி ஒன்றை ஆடிவிட்டுப் போகிறது கவி

92