பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 (

பாஸ்கரன் கண்ட பட்டிமன்றம்

C

சண்டை என்றாலே ஒரு சுவைதான். அதிலும் சண்டையிடுபவர்களைக் காட்டிலும் வேடிக்கைப் பார்ப்பவர்களுக்குத் தனி உற்சாகம், இந்த உற்சாகமான அனுபவத்துக்காகத்தான், நம் நாட்டிலே மல்யுத்தம், ஆட்டுச்சண்டை, மாட்டுச்சண்டை, சேவல் சண்டை என்று பல வகை போட்டா போட்டிகளை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள். சண்டையிலே இது ஒரு வகை. இலக்கிய உலகிலே இருதரப்பாருக்கிடையில் இப்படி ஒரு சண்டை மோதல் ஏற்படுமானால் அதுவே பட்டிமண்டபமாகிவிடுகின்றது.

இன்று பட்டிமண்டபம் என்றால் தெரியாதவர்கள் இல்லை. பட்டிமண்டபம் இல்லாத இலக்கிய அரங்குகளும், இலக்கிய விழாக்களும்தான் இல்லையே!

இந்த பட்டிமண்டபம் கவிச்சக்கரவர்த்திக் கம்பன் காலத்திலும் இருந்திருக்கிறது. மாணிக்கவாசகர் காலத்திலும் இருந்திருக்கிறது.

“பன்னரும் கலைதெரி பட்டிமண்டபங்களும்” என்று கம்பனும், பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை எட்டினோடு இரண்டும் அறியேனையே’ என்று மணிவாசகரும் பாடி வைத்திருக்கிறார்கள். இத்தனைப் பிரசித்தமாயிருந்து இடைக்காலத்தில் மறைந்த பட்டிமண்டபங்கள் மீண்டும் தலையெடுத்தது காரைக்குடி கம்பன் விழாக்களிலேதான். காரைக்குடி கம்பன் கழகச் செயலாளர் திரு. சா. கணேசன்தான் பட்டிமண்டபத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர் என்று சொன்னாலும் தகும். தொடர்ந்து பல பட்டிமண்டபங்களை நடத்திக் கொடுத்து தமிழ்நாட்டில் அதைப் பிரபலப்படுத்தியவர் என் தந்தையார் திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டமான் அவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.