பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 யாதும் ஊரே யாவரும் கேளிர்

ஒரு பட்டிமண்டபம், கம்பனிலே உயர்வாயிருப்பது தாயன்பா, காதலா, சகோதர பாசமா? என்று விவாதம். நீதிபதி, தொண்டைமான் அவர்கள்தான். விவாதங்கள் முடிந்தபின் தீர்ப்புக் கூறினார்கள். “கம்பனில் சிறப்பாயிருப்பது சகோதர பாசம்தான்” என்று. “ஏனென்று கேட்டால், தாயன்பும், காதலும் இயற்கையாக எங்கும் நாம் காணக்கூடிவை. சகோதர பாசம் என்று வரும்போது, அது பேச்சளவிலும், எழுத்தளவிலும்தான். நடைமுறையிலே சாதாரணமாக காணமுடியாத ஒன்று. சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சிண்டைப்பிடிப்பதும், கழுத்தில் கத்தி வைப்பதுதான் வழக்கத்தி லிருக்கிறதே தவிர, ஒற்றுமையாயிருப்பது என்பதே அபூர்வம். கம்பராமாயணத்திலே அந்த அபூர்வமான பாசத்தைத்தான் சிறப்பாகக் காட்டுகிறான் கம்பன். காவியத்தின் ஆரம்பத்திலிருந்த கடைசிவரை இழையோடி நிற்பதே அந்தச் சிறப்பான அம்சம்தான். உடன் பிறந்தவர்களையும், உடன்பிறவாத சகோதரர்களையும் இராமன் அரவணைத்துக் கொண்டு செல்வது அற்புதமாயிருக்கிறது. உடன்பிறந்த தம்பியர் மூவர் என்றால், உடன்பிறவாத தம்பியரும் மூவர். ஒருவன் வேட்டுவக் குலத்திலே பிறந்தவன், இன்னொருவன் குரக்கினத் தலைவன், அடுத்தவனோ அரக்கர் குலச் செம்மல். அத்தனை பேரும் இராமனிடத்துக் காட்டுகின்ற பாசமும் பரிவும் இராமன் அவர்களிடத்துக் காட்டுகின்ற அன்பும் கம்பனில் சிறப்பாகக் கூறப்பட்டிருக்கின்றன” என்றெல்லாம் விளக்கமும் கொடுத்தார்கள்.

இராமனுக்கு உடன்பிறந்த தம்பியர் மூவர் உடன்பிறவாத தம்பியர் மூவர். தொண்டைமானோ இந்த விஷயத்தில் இராமனையும் மிஞ்சி விடுகிறார். உடன் பிறந்த தம்பி ஒருவர் என்றால், உடன்பிறவாத தம்பியர் எத்தனையோ பேர். போகிற இடங்களில் எல்லாம் நண்பர்களையும், இன்னும் ஒருபடி மேலேபோய் தம்பி