பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 எழுத்தும் பேச்சும்


தொண்டைமான் அவர்களுடைய பேச்சு முந்தியதா எழுத்து முந்தியதா என்று கேட்டால் பதில் சொல்வது சிரமம். ஏனென்று கேட்டால் பேச ஆரம்பித்த போதே எழுதியிருக்கிறார்கள். எழுத ஆரம்பித்த போதே பேசியுமிருக்கிறார்கள். அந்த நாளில், தமிழ்நாட்டில் பிரபலமான ஒரே தமிழ்ப் பத்திரிகை ‘ஆனந்த போதினிதான். தொண்டைமானுடைய இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்ட பத்திரிகையும் ஆனந்த போதினிதான். அநேகமாக கம்பராமாயணக் கட்டுரைகளாகவே இருக்கும். தயரதன் தண்ணளி, கைகேயின் கைதவம்’, ‘பரதன் பண்பு’, ‘சீதையின் சீலம் இந்த ரீதியில்தான் கட்டுரையின் தலைப்பும், ஏன் கட்டுரையுமே எதுகை மோனையோடு இருக்கும். அப்போதெல்லாம் அந்த நடைக்குத்தான் ‘மவுசு. தொண்டைமானுடைய தற்போதைய தமிழ் நடையைப் படித்தவர்களுக்கு இதே தொண்டைமானா அப்படியும் எழுதினார்? என்று வியப்பாக இருக்கும். ஐயா டி.கே.சி.யுடன் தொடர்பு ஏற்படாத காலம் அது.

தமது தமிழார்வத்தைத் தூண்டிவிட்டவர் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் என்றும், கவிதை என்றால் என்ன, கம்பன் யார் என்பதையெல்லாம் உணர்த்தியவர் ரசிகமணி டி.கே.சி தான் என்றும் அவர்களே அடிக்கடி கூறுவார்கள்.

பேகம் திறனும் அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. மாணவனாக இருக்கும்போதே, திருநெல்வேலியில் Students Association என்ற மாணவர் சங்கத்தை நிறுவி, அண்ணாச்சி வீரபத்திர பிள்ளையவர்களுடன் (எல்லோருக்குமே அண்ணாச்சிதான்) செயலாளராக இருந்து நீண்ட காலம் தொண்டாற்றி இருக்கிறார்கள். மாணவ நிலை மாறி, கலெக்டர் ஆபிஸ் குமாஸ்தாவாக உள்ளூரிலேயே பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது இன்னும்