பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தொண்டைமான் பரம்பரை
ராஜேஸ்வரி நடராஜன்


வண்டமர்ப் பன்மலர் தண்டலைப் பாங்குஎலாம்
வளமிகும் நெல்லையூரில் வடக்கன வரததானத் ::::தெருசெய்த வழிபாட்டில் வந்த மேலோன் தண்டாயுதன் முருகதாசன் திருப்புகழ்ச் சாமிக்குநல்
சீடா! சண்முகநாத குமரேசன் திருத்தாள்கள்
சந்ததம் போற்றுமெய்யா
கண்டாரும் செந்தமிழ் வண்ணமொடு பாவினம்
கழறலே கமழும்வாயோன் கருணையே வடிவான
அருணாசலத் தொண்டைமானெனும் கன்னல்
மொழியாய்
தண்டாமரைப் பதத்தானைச் சூடினேன்
சாற்றுமென் புன்கவிக்குத் தவறுபதம் சாராது
தளைகள் தடுமாறாது தந்தருள் சிற்றப்பனே.

என்று ஒரு பாடல். இந்தப் பாடலைப் பாடியவர் என் தந்தையார் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்களின் பாட்டனார் அமரர் வி.பி. சிதம்பரத் தொண்டைமான் அவர்கள்தான். இந்தப் பாட்டிலிருந்து நாம் அறிந்து கொள்வது அந்தச் சிதம்பரத் தொண்டைமான் ஒரு கவிஞர், அவர்களது சிற்றப்பா ஒரு கவிஞர். அவர் அருள்மிகு தண்டபாணி சுவாமிகளது சிஷ்யர் என்பதே. இதிலிருந்து தெரியும் என் தந்தையார் ஒரு பெரிய புலவர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று. அந்தப் பரம்பரையைப் பற்றியே ஒரு சில வார்த்தைகள்.

திருநெல்வேலியில் இருக்கும் தொண்டைமான் குலமக்களாகிய நாங்கள் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்தப் பெரும்பாணாற்றுப்படை பாட்டுடைத் தலைவனாம் தொண்டைமான் இளந்திரையன் வழிவந்தவர்களே. ஆதியில் தொண்டை மண்டலத்தில் கலை வளர்த்த காவலர்களாக இருந்த பல்லவப் பேரரசர்களில்