பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

தொண்டைமானுடைய பேச்சுக்கு ஓர் உதாரணம். நான் இந்து கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த சமயம் மாணவர் இலக்கிய சங்கத்தின் சார்பில் அவர்களைப் பேச அழைத்திருந்தார்கள். தலைப்பு எது கலை என்பது. “மனிதனுடைய அழகுணர்ச்சியைத் தூண்டி, அவனுக்கு இன்பம் பயப்பதெல்லாம் கலை, என்று பொதுவாகச் சொல்லிவிடலாம். சூரியோதயத்தைப் பார்க்கிறோம். கிழக்குத் திசையிலே தங்கத்தை உருக்கி விட்டதுபோல் தகதகவென்று ஒளி வீசிக்கொண்டு சூரியன் கடலிலிருந்து கிளம்புகிற காட்சி மனிதனுடைய அழகுணர்ச்சியைத் தூண்டத்தான் செய்கிறது. ஆனால் சூரியோதயம் கலையாகி விடுமோ? அது இயற்கை. ஆனால், அதே சூரியோதயத்தை, அதன் அழகு குன்றாமல், சொல்லிலோ, திரையிலோ, கவிதையாகவோ, ஓவியமாகவோ ஒருவன் காட்டுகின்றபோது அது கலையாகிவிடுகிறது. அதைப் படைத்தவனும் கலைஞனாக, கவிஞனாக ஆகிவிடுகிறான். சூரியோதயம் பற்றி பாரதி பாடினான், “தங்கம் உருக்கித் தழல் குறைத்து, தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ” என்று.

வடநாட்டுக்காரர்களுக்கு கேசரி தெரியும். உப்புமா சாப்பிட்டுப் பழக்கம் இல்லை. நமக்கோ, கேசரி உப்புமா இரண்டின் சுவையும் தெரியும். உப்புமா என்றால் என்ன என்று சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வது? Kesari-Sugar+ Salt=உப்புமா என்று கணக்குப் போட்டுக் காட்டினால் புரிந்து கொள்வார்கள். பாரதியும் அப்படித்தான் pub(5’s Lifluu Gogu5055&prail. Molten Gold - heat + honey = சூரியோதயம். என்பதாக” என்று விளக்கினார்கள். மாணவர்கள் சந்தோஷ ஆரவாரம் அடங்க வெகு நேரமாகியது.

பேச்சுக்கிடையே பாடல்களைச் சொல்லுகின்ற போதும், வார்த்தைக்கு வார்த்தை அனுபவித்து, பாவத்தோடு, நிறுத்தியும், மடக்கியும் சொல்வார்கள். அப்படிச் சொல்வதால் சபையோருக்குமே அந்தப் பாடல் மனப்பாடமாகி விடும். பேச்சின் பயனே அதுதான் என்று சொல்வார்கள்.

வெறும் மேடைப்பேச்சோடு நின்றுவிடாமல் வானொலியிலும் பலமுறை பேசியிருக்கிறார்கள். அவை மட்டுமன்றி, எத்தனையோ கவியரங்கங்கள், பட்டி மண்டபங்கள் முதலியவற்றிலும் பங்கு கொண்டிருக்கிறார்கள். பட்டிமண்டபத்தை ஆரம்பித்து வைத்தவர் திரு. சா. கணேசன் அவர்கள். அதைப் பிரபலப்படுத்தியதோ தொண்டைமான்தான். பட்டிமண்டப விவாதங்களிலே பங்கு கொள்வதைவிட, நீதிபதியாக அமர்ந்து தீர்ப்புக் கூறுவதே அவர்களுக்குப் பிடித்தமான விஷயம்.