பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230. கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

எப்படி என்று கடிதத்துக்குக் கடிதம் அங்கலாய்க்கிறார்கள். தலைச்சேரியிலே,

அம்பலங்கள் தான் இருந்தும்

அழகான கோயில் இல்லை வம்பளந்து தீர்ப்பதற்கே

வாயன சாலைகளுண்டு கண்ணனுக்கும் காளிக்கும்

கருத்த அன்னை பகவதிக்கும் எண்ணரிய கோயில்கள்தாம் எல்லா இடத்தினிலும் காவுகளும் கடவுகளும்

கதகளியின் காட்சிகளும் மேவி வந்த நாட்டிடையே

மேலான கலை இலையே. என்று இந்தக் கலையுள்ளம் ஏங்கித் தவித்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மீண்ட பிறகு, ஒட்டிக்கு இரட்டியாய் கலைப்பணிச் செய்யத் தூண்டும் ஒரு கருவியாக அமைந்துவிடுகிறது இந்த அஞ்ஞாத வாசம்.

தமிழ்நாட்டிலே அவர்கள் போகாத தலமில்லை, தரிசிக்காத கோயிலில்லை, வணங்காத மூர்த்தியில்லை. கல்கியிலே தொடராக வந்த வேங்கடம் முதல் குமரி வரை கட்டுரைகளை, கிழவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆவலுடன் படித்தார்கள். அதோடு நில்லாமல் அந்த ஊர்களுக்குமே செளகரியப்பட்டபோது ஒரு நடை போய்வந்தார்கள்.

வேங்கடத்தோடு நின்றுவிடாமல், வேங்கடத்துக்கு அப்பாலும் சென்று பார்க்க எண்ணி 1962 ஆம் வருஷ ஆரம்பத்தில் கோவை நண்பர்கள் ரீ கிரிதாரி பிரசாத் ரீ கே. ஆர். ராதா இருவருடனும் வடநாட்டு யாத்திரையை மேற்கொண்டார்கள். இந்தக் கட்டுரைகள் எல்லாம் சிற்பக்கலையிலே அவர்களுக்குள்ள ஈடுபாட்டை நன்கு புலப்படுத்துகிறது.

அமர காதலர், கல்லும் சொல்லாதோ கவி எல்லாம் அமர இலக்கியங்களாகவே விளங்குகின்றன. வேங்கடம் முதல் குமரி வரை முதல் பாகத்துக்கு முன்னுரை எழுதிய ஜட்ஜ் மகராஜன் அவர்கள் தொண்டைமானுடைய தமிழைப் பற்றி அழகாகச் சொல்கிறார்கள்.