பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

படிக்கும்போது அனுபவித்துக் கொண்டிருந்தது விஷயம் பற்றி அல்ல. வார்த்தைக்குப் பின்னால் துடித்துக் கொண்டிருந்த தங்கள் தூய உள்ளத்தைத் தான் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தேன். அன்பானது, தான் பிறக்கும் உள்ளத்தை ஆனந்த மயமாக்குகிறது. அதோடு எந்த உள்ளத்தில் பாய்கிறதோ, அந்த உள்ளத்தையும் ஆனந்த மயம் ஆக்குகிறது. ஆகவே நம் இருவருக்குமே அந்த ஆனந்தப் பேறு கிடைத்துவிட்டது. எத்தனை உண்மையான வார்த்தைகள்.

ஐயா டி.கே.சியிடத்திலே மட்டுமன்றி அவர்கள் குடும்பத்தார் அனைவரிடத்திலும் தொண்டைமானுக்கு தனிப்பட்ட அன்பும் பரிவும் உண்டு. அண்ணியிடம் பெரும் மதிப்புக் கொண்டவர்கள். அண்ணியின் விருந்தோம்பலுக்கும், தோசைக்கும் இலக்கிய அந்தஸ்தையே தேடிக் கொடுத்தவர்கள் தொண்டைமான்தான். முத்த பேரன் தீப நடராஜன் முதல், கடைக்குட்டி குமாரசாமி வரை தொண்டைமானிடத்திலே அன்பும் அபிமானமும் கொண்டவர்கள். அந்தக் குழந்தைகளின் நலனிலும், வளர்ச்சியிலும் அன்று போலவே இன்றும் அவர்களுக்கு அக்கறை உண்டு. ஐயா அவர்களின் மறைவுக்குப் பின்னும், அந்தக் குடும்பத்திலே அவர்கள் கொண்ட அன்பு தேயவுமில்லை, மாறவுமில்லை. ரசிகமணி டி.கே.சி நினைவுக் கழகத்தை நிறுவி, ஆண்டுதோறும் டி.கே.சி நினைவு விழாக் கொண்டாடி இன்றும் ரசிகமணியின் புகழைப் பரப்பி வருகிறார், ரசிகமணியின் பரம ரசிகரான பாஸ்கரத் தொண்டைமான் என்றால் அதிகம் சொல்ல வேண்டியதில்லைதானே. -