பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கலெக்டர் பணியும் கலா சேவையும்

–-–

சில ஆண்டுகளுக்கு முன்னர் மாநில சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சிலருக்கு ஐ.ஏ.எஸ் தேர்வுக்குழு ஒரு பேட்டி நடத்தியது. ஒரு மாவட்டக் கலெக்டரின் தனி உதவியாளர் ஒருவர் பத்தாண்டுகளுக்கு மேல் டிபுடி கலெக்டராகப் பணியாற்றியவர், பேட்டிக்குச் சென்றார். பேட்டி ஆரம்பமாகியது,

தேர்வுக் குழு - பர்மியப் பிரதமர் யார்? டிபுடி கலெக்டர் - தெரியாது ஸார். தேர்வுக் குழு - பாகிஸ்தான் அதிபர் யார்? டிபுடி கலெக்டர் - தெரியாது சார். தேர்வுக் குழு நீங்கள் பத்திரிகைப் படிப்பதுண்டா?

டிபுடி கலெக்டர் . இல்லை.

தேர்வுக் குழு - என்ன? நிர்வாகத் துறையிலுள்ளவர்கள் பத்திரிகை படிப்பதில்லை என்றால் எப்படி?

டிபுடி கலெக்டர் - எனக்கு ஏகப்பட்ட வேலை. பத்திரிகைப் படிக்க அவகாசம் கிடைப்பதில்லை.

தேர்வுக் குழு உங்கள் கலெக்டர் யார்? டிபுடி கலெக்டர் - திரு. பாஸ்கரத் தொண்டைமான்.

தேர்வுக் குழுவின் தலைவர் திரு. ஹெஜ்மாடி, ஐ.சி.எஸ் தொண்டைமானைப் பற்றி நன்கு அறிந்தவர். ஆகவே “ஓ, பாஸ்கரத் தொண்டைமானா? அவரைப் பற்றி உங்களுக்கு நன்றாகத்