பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

தொண்டைமானவர்கள் எங்கு பணியாற்றினாலும் சுற்றுப்புறத்திலே உள்ள கோவில்களை எல்லாம் சுற்றிப் பார்க்கத் தவறமாட்டார்கள். பக்தி மட்டும் காரணமல்ல, சிற்பக் கலையின் மீது ஏற்பட்டுள்ள கரைகாணாக் காதலும் கூடத்தான்.

ஒரு பெரிய கோவில். மூலஸ்தானத்திலே பல பக்தர்கள் கூடி வணங்கி நிற்பார்கள். தொண்டைமானும் கூடவே நிற்பார்கள். அபிஷேகம் அர்ச்சனை எல்லாம் நடக்கும் பிரசாதம் கொடுத்து முடிந்ததும் எல்லோரும் வெளியே வரக் கிளம்புவார்கள். கூட்டத்தில் தொண்டைமான் இருக்கமாட்டார். கோவிலைச் சுற்றியுள்ள இருண்ட பிரகாரத்திலே தோளில் மாட்டிய காமிராவுடனும், கையிலே பிடித்த டார்ச்சுடனும் சுவர்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு நிற்பார் ஒருவர். “யார் இந்த ஆசாமி?” என்று கேட்டார் சந்தேகத்தோடு ஓர் அன்பர். “யாரா? தொண்டைமானைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்” என்பார் அடுத்தவர். உண்மையுமே அதுவாகத்தான் இருக்கும்.

திரு. தொண்டைமான் அவர்களைத் தஞ்சை ஜில்லாவிலே பணியேற்கச் செய்தது இறைவன் திருவுள்ளம் என்றுதான் கூற வேண்டும். இராஜராஜ சோழன் கல்லால் இழைத்த காவியமாகிய பெரிய கோயிலை எடுப்பித்து வான்புகழ் தேடிக்கொண்ட தஞ்சையிலே தான், தொண்டைமான் அவர்களும் கலைக்கூடம் அமைத்து அழியாப் புகழைத் தேடிக் கொண்டார்கள்.

கலைக்கூடம் தோன்றிய வரலாறே ரசமானது. ஒருநாள் தஞ்சைக்கருகில் உள்ள கருத்தட்டாங்குடிக்கு தொண்டைமான் சென்றார்கள். அங்கே கையிழந்த பிரம்மா ஒருவர் கவனிப்பாரற்றுக் கிடந்தார். கலையழகில் தோய்ந்த தொண்டைமானுக்கு, இப்படி வயல்வெளிகளிலும், ரோட்டுப் புறங்களிலும், சந்து பொந்துகளிலும் சீந்துவாரற்றுக் கிடக்கும் தெய்வத் திருவுருவங்களை எல்லாம் ஒன்று சேர்த்து உயிர் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அவ்வளவுதான். பிரம்மா தஞ்சை நோக்கிக் கிளம்பினார். அதுவரை ஏறிட்டுப் பார்க்காதவர்கள் கூட எதிர்ப்பைக் கிளப்பினார்கள். எதிர்ப்பை எல்லாம் சமாளித்துக் கொண்டு தஞ்சை அரண்மனை வந்து அமர்ந்துவிட்டார் பிரம்மா. இதுவே பெரும் சாதனைக்குப் பிள்ளையார் சுழியாக அமைந்தது.

அது முதல் தஞ்சை ஜில்லாவிலே கேட்பாரற்றுக் கிடந்த க்கெல்லாம் அடித்தது யோகம். திரு. தொண்டைமானவர்களின்