பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. . * - ^} - திருநெல்வேலி கலெக்டர் ஆபிசிலே குமாஸ்தாவாகப் பணியாற்

காலம். ஒருநாள் உடன் வேலை பார்க்கும் நண்பருக்கு ஏதோ குறிப்புத் தேவைப்பட் குறித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார். இவ தேவைப்பட். குறிப்பை ஒரு உறையிலிட்டு, சக குமாஸ்தாவின் பெயரையும் உறையின் மேல் எழுதி அவர் மேஜைக்கு அனுப்பி வைத்தார்கள். பெயருக்கு முன்னால் சம்பிரதாயமாக எழுத வேண்டிய M.R.Ryய்யை எழுதவில்லை. அதைப் பெரிய குற்றமாக எடுத்துக் கொண்டார் நண்பர். அதுபற்றி இவருக்குச் சற்று மனத்தாங்கலோடு எழுதியும் விட்டார். தொண்டைமான் பார்த்தார்கள். நல்ல r இரண்டு பேப்பரை எடுத்தார்கள். M.R.Ry. M.R.Ry. என்று இம்போலிஷன் எழுதுகிற மாதிரி எழுதினார்கள். அதை உறையிலிட்டார்கள். உறையின் மேலும் மறக்காமல் M.RRy. போட்டார்கள். ஏதோ, ஞாபக மறதியால் சிறு தவறு நடந்துவிட்டது. இப்படி வருங்காலத்திலும் நடந்துவிடக் கூடாதே என்று முன்னச்ெசரிக்கையாக நிறைய M.R.Ry. அனுப்பியிருக்கிறேன். நான் எழுதத் தவறிவிடுகிற சமயங்களிலெல்லாம், அவற்றிலிருந்து ஒவ்வொன்றாக, என் கணக்கில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஸ்டாக் தீர்ந்து விட்டால் தெரியப்படுத்துங்கள். மீண்டும் அனுப்பி வைக்கிறேன்” என்று நைஸாக, நகைச்சுவையோடு கடிதமும் எழுதி, அத்துடன் வைத்து அனுப்பிவிட்டார்கள். பார்த்த நண்பருக்கு மனத்தாங்கல் மறந்து, சிரிப்பே வந்துவிட்டது.


இப்படி அவர்கள் உத்தியோக வாழ்க்கையிலே எத்தனையோ ரசமான சம்பவங்கள். எனக்குத் தெரிந்தது கொஞ்சம் தெரியாதவை எவ்வளவோ அத்தனையையும் இங்கே இப்போது எழுதுவது என்பது சாத்தியமல்ல. தொண்டைமான் அவர்களே சர்க்கார் சேவகம் முப்பது ஆண்டுகள் என்ற தலைப்பில் தமது அனுபவங்களை எல்லாம் எழுதப் போவதாய்ச் சொல்வார்கள். நான் சொல்வதைவிட அவர்களே சொன்னால் ரசமாக இருக்குமல்லவா?

தொண்டைமானவர்கள் பணியாற்றிய ரெவினிய, இலாகா

த நற

என்பது பெரிய சமுத்திரம். அலை அலையாக வேலைகள் வந்து குவிந்து கொண்டே இருக்கும். சுறாக்களுக்கும் திமிங்கிலங்களுக்கும் குறைவில்லை. இந்தக் கடலிலே விழுந்தவர்களில் பலர் இந்த அலைகளால் மொத்துண்டு, மூச்சுத் தினறி, கரையோரம் ஒதுக்கப்படுவதுண்டு. அமிழ்ந்தே போய் விடுபவர்களும் உண்டு. எதிர் நீச்சல் போட்டு சமாளிப்பவர்கள் வெகு அபூர்வம். இப்பேர்ப்பட்ட