பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 க ை மணி பாஸ்கரத் தொண்டைமான்

அம்மாதான் என்று தோன்றுகிறது. அப்பாவுக்கு சட் என்று கோபம் வரும் வந்த வேகம் தெரியாமல் போய்விடவும் செய்யும். காசிக்குப் போய் வந்தபின் கோபத்தை விட்டு விட்டேன் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மை அம்மாவைக் கேட்டுப் பார்த்தால் தெரியும்.

அம்மாவிடம் சொன்னார்கள் ஒருநாள் “மணிவிழா மலரிலே உன்னைப் பற்றி எழுதி, வாங்கு வாங்கு என்று வாங்கி விடுகிறேன்” என்று. நான் விளையாட்டாகக் கேட்டேன். “அப்படியே உங்களைப் பற்றியும் எழுதலாம் தானே’ என்று “ஓ. எழுதேன் வேண்டாம் என்று சொல்லவில்லையே. உன் அம்மா பெருமையையும் என்னுடைய குறையையும் எழுதேன்’ என்றார்கள் ஆம். எல்லோருமே நிறைவை எழுதிவிட்டால், குறையை எழுதவும் ஓர் ஆள் தேவை தானே? இங்கே அப்பா அம்மா இவருடைய நிறைவையும். ஏன் இருவருடைய குறையையுமே எழுதியிருக்கிறேன். நான் தானே எழுதமுடியும். என் மீது அவர்கள் கோபிக்க முடியாதே. உள்ளதை உள்ளபடி தானே எழுதியிருக்கிறேன். அம்மா குறையை எழுதியதில் அப்பாவுக்குத் திருப்தியும், அப்பா குறையை எழுதியதில் அம்மாவுக்குத் திருப்தியும் ஏற்பட்டால் அதுவே போதும் எனக்கு வேண்டியது இருவர் திருப்தியும்தான்.