பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைக் களஞ்சியம்

23

பெருமானையே நேருக்கு நேர் கண்டு அளவளாவும் பேறு பெற்றவர். ஒருநாள் திருக்குற்றாலத்தை அடுத்த திருமலை முருகனைத் தரிசிக்க மலைமீது ஏறி, தரிசித்த பின் அம்மலை உச்சியில் நின்று மலைச் சரிவிலே உருண்டிருக்கிறார். அவரது பக்தியை மெச்சிய ஆண்டவன் அவர் உடலுக்கு யாதொரு தீங்கும் நேராவண்ணம் காத்திருக்கின்றான். இதை முருகதாச சுவாமிகளே பாடியிருக்கிறார்கள். அவர்கள் பாடிய பாட்டு இதுதான்.

வடதிசையில் தலைவைத்து

மறலி திசைக் கால்நீட்டி

உடலை அந்தத் திருமலையிற்

உச்சியின் நின்று உருட்டிவிட்டேன்

விடலையிடும் தேங்காய் போல

வேறு பட்டுச் சிதறாமல்

மடமடவெனக் கொண்டாங்கோர்

மண் தரையில் விட்டதுவே.

இப்படி முருகன் அருள் பெற்றுயர்ந்த முருகதாச சுவாமிகளின் சிஷ்யர்களாகவே எனது பூட்டனாரும், அவர்கள் சிறிய தந்தையும் இருந்திருக்கிறார்கள். அருணாசலத் தொண்டைமான் என்னும் கவிஞர், தன் குருநாதரைப் போலவே வண்ணங்களும் சந்தங்களும் பாடுவதில் சமர்த்தர். அவர்கள் செந்திலம்பதி இரட்டை, செந்தில் வண்ணப் பதிகம் எல்லாம் பாடியிருக்கிறார்கள். மேலும் அகப்பொருள் அடிப்படையில் பிறிவுழி இரங்கல் துறையில் தனது குருநாதரைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள். அதன் முதல் பாட்டு,

சோதிமிகுஞ்சடையார் திரு நீலகண்டமுளர்

சிவகாமசுந்தரி பாகமொன்றிய

சோமசுந்தரர் தம்பதந்தேடியே

நாடியருந்தவமே செய லால்வரம்பெறுநாள் மலர்தவே னிந்திர னாதியந்தரர்
வாழ்விழந்துவ ருந்தவுஞ்சீறு

சூரன்மடிந்திடவே தனி வேல்விடுங்குகவே

ளிருபாதபங்கய மீதுநெஞ்சக

லாதுநின்றுத வஞ்செயுந்தீரர்

அருண்முருகதாசரெனையாளுவார்

என்பதாகும்.

எங்கள் பூட்டனார் சிதம்பரத் தொண்டைமானும் பலப்பல பாடல்கள் பாடி உள்ளார்கள். அரங்கத்து அரவணையான் மீது பாடிய