பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

5

{

கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

“பதி, பசு, பாசம் என்று மடிசஞ்சி பாஷையில் பேசி, அவர் நம்மை மிரட்டுகிறதில்லை. நாமெல்லாம் சினிமா உலகத்தில் LTQ கொண்டிருப்பவர்கள் என்று அவருக்குத் தெரியும். ஆகவே “கடன் வாங்கிக் கல்யாணம் என்ற சினிமா படத்தைப் பற்றிப் பேசி, நம்மைத் தன் வசம் ஆக்கிக் கொண்டு, நம் கையைப் பிடித்துக் கொண்டே, ஏழுமலையும் ஏறி, “வான் நின்ற சோலை வடமலை மேல் நின்ற மாதவன்” சந்நிதியில் கொண்டே நிறுத்திவிடுகிறார்.

நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று அவருக்குத் தெரியும். கலெக்டர் வேலை பார்த்தவருக்கு இது கூடத் தெரியாமலா இருக்கும்? ஆகவே ஜனநாயகத் தேர்தல் முறையைப் பற்றிப் பேசுவார். காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்போம். உடனே பத்தாவது நூற்றாண்டிலே குடவோலைத் தேர்தல் முறை எப்படி நடந்தது என்று சொல்லுவார். இதைப் பற்றி உத்திரமேரூர்க் கோயிலிலே ஒரு கல்வெட்டு இருக்கிறது என்று சொல்லி நம்மைக் கோயிலுக்கே இழுத்துச் செல்வார். அப்படியே உள்ளேயிருக்கும் வைகுண்டப் பெருமாள் முன்னிலையிலே கொண்டு போய் நிறுத்துவார். தம்மை அறியாமலேயே, பகுத்தறிவாளர்களாகிய நமக்கும் பக்தி வந்து விடுகிறது. இவ்வாறு விதம்விதமான உத்திகளைக் கையாண்டு நமக்குக் களிப்புட்டுகிறார்.

அவருடைய தமிழைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உணர்ந்ததை உணர்ந்தபடி எல்லாம் தமிழில் எடுத்துக் கூறும் சித்து அவருக்குக் கை வந்திருக்கிறது. ‘கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திக்குப் பின் தமிழை இப்படிச் சுகமாகக் கையாளுபவர் தொண்டைமான்தான் என்று இன்று பல அன்பர்கள் கருதுகிறார்கள்.

அவருடைய தமிழ் நடை, முதலிலிருந்து கடைசி வரை துள்ளி விளையாடிக்கொண்டே செல்கிறது. பம்முவதும், பாய்ச்சல் காட்டுவதும், கர்ணங்கள் போடுவதும், பல்டி அடிப்பதும், ஹாஸ்யங்களை உதிர்ப்பதும், பக்தி வெள்ளத்தில் வாசகர்களை முக்கி முக்கி எடுப்பதுமாக இந்தப் பாஸ்கரத் தமிழ் செய்கிற ஜால வித்தைகள் பலப்பல.

ஆசாமி பொல்லாதவர். விளையாட்டுப் போக்கிலேயே பல அரிய உணர்ச்சிகளைப் புகட்டுகிறார். மேனி சிலிர்க்கச் செய்கிறார். புராணக் கதைகளைப் பக்தியோடு சொல்கிறார். அதே முச்சிலேயே புராணங்களுக்குப் பகுத்தறிவு முலாமும் பூசுகிறார்.