பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

செல்லும் வழிகளைச் சொல்லி அழைத்துச் சென்று கோயில் முன் நிறுத்துகிறார். கோபுரம் முதலிய அமைப்புகளைக் காட்டுகிறார். புராணக்கதைகளை ரசமாகச் சொல்கிறார். அங்கே உள்ள சிற்ப வடிவங்களின் சிறப்பைச் சுட்டிக் காட்டுகிறார். தேவாரத்தையும் திவ்ய பிரபந்தத்தையும் எடுத்துச் சொல்கிறார்.

புராணங்களில் காணாத பல கதைகளையும் வழக்கங்களையும் பழமொழிகளையும் அங்கங்கே சொல்கிறார். இது மிக மிகப் பயனுள்ள தொண்டு. சொல்வதைச் சுவைபட, நுட்பமான நகைச்சுவை சில இடங்களில் மலர, சொல்கிறார்.

இந்தத் தொகுதியில் நாம் எத்தனையோ மூர்த்திகளைத் தரிசித்துக் கொள்கிறோம். எத்தனையோ தீர்த்தங்களில் நீராடுகிறோம், புராண புருஷர்களையும் சரித்திரத்தில் வரும் மக்களையும் சந்திக்கிறோம். கட்டுரையின் எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் கச்சிதமாக அமைந்து ஒரு சிற்ப வடிவைப்போலக் கட்டுரையை ஆக்குகின்றன.


தலங்களைப் பற்றிப் பல நுட்பமான உண்மைகளையும், மூர்த்திகளின் அமைப்பிலுள்ள சிறப்பான பகுதிகளையும் சொல்கிறார். இவற்றை, பலமுறை அவற்றை தரிசித்தவர்கள் கூட

அறிந்து கொள்வதில்லை.

குடந்தைக் கீழ்க்கோட்டமாகிய நாகேசுவரன் கோயிலில் சித்திரை மாதத்தில் மூன்று நாட்களில் சூரியன் கருவறையில் தன் கதிர்களை வீசுகிற உண்மையை ஓரிடத்தில் சொல்கிறார். கும்பேரிசுவர சுவாமி கோயிலில் உள்ள அம்பிகை மந்திர பீடேசுவரி மங்களாம்பிகை என்ற சிறப்பைப் புலப்படுத்துகிறார். சுவாமி மலையில் மகாமண்டபத்தில் வடக்குச் சுவர்ப்பக்கம் ஒரு பீடத்தில் சபாபதி என்ற பெயரோடு இருப்பவர் நடராஜர் அல்ல, பாகுலேய மூர்த்தி என்று தெரிவிக்கிறார். தாராசுரத்தில் அர்த்தநாரி உருவத்தில் மூன்று தலைகளுடன் நிற்பவர் விசுவரூப மூர்த்தி என்று காட்டுகிறார். நாச்சியார் கோவில் கல்கருடன், கண்ணமங்கையிலுள்ள தேன்கூடு, திருவாரூரில் முக்குத்தி தீர்த்தம் என்று வழங்கும் முக்தி தீர்த்தம், சூர சங்காரத்துக்கு முதல் நாள் முகத்தில் வேர்வை அரும்பும் சிக்கல் சிங்காரவேலன், ஆவுடையார் கோயிலில் பதினோரு கரத்தோடு வீற்றிருக்கும் வல்லப கணபதி இப்படிப் பலவற்றைப் பற்றிய நுட்பமான செய்திகள் இதில் வருகின்றன.