பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

„r“,

துப்ரே, பெர்சி பிரவுன் என்று எதேதோ வாய்க்கு வழங்காத பெயரை எல்லாம் உச்சரிப்பார்கள். அப்புறம் ஐயம் தீர்ந்து தெளிவு ஏற்பட்டு விட்டதற்கு அறிகுறியாக ஒஹோ சரிதான். அதானே பார்த்தேன்’ என்று தமக்குத்தாமே ஆறுதலடைந்து நடையைக் கட்டிக்கொண்டு விடுவார்கள். -

நம்மைப் போன்றவர்கள் கிட்டே வந்து “என்ன ஐயா, இதில் என்ன விசேடம்? என்று கேட்டால் “இந்தக் கர்பெல் இருக்கிறதே இது எந்த ப்ரியடா இருக்கலாம் என்று யோசித்தேன். வேலைன் இருப்பதாலே மகேந்திரனுக்குப் பின் காலமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவுகட்ட வேண்டியதாக இருக்கிறது எனக் கூறுவார். கார்பெல் என்றால் நமக்கு ஒன்றும் தெரியாது. தமிழ்நாட்டுத் துணின் மேலே, பழுவை எற்றி தூணின் மையத்திற்குக் கொணர்வதற்காக தமிழனால் வைக்கப்பெற்ற அதற்குத் தமிழில் போதிகை என்று பெயர் என்பது, பாவம் அவருக்குத் தெரியாது. இவர்கட்கு கலையார்வம் நிரம்ப உண்டு, பிறமொழி அறிஞர்கள் எழுதிய விளக்க அல்லது ஆராய்ச்சி நூல்களைப் படித்துவிட்டு அதன் மூலமாக நம் நாட்டு கலைமுறைகளைத் தெரிந்து கொண்டு மதித்துப் போற்ற முன் வந்தவர்கள். அவர்களுள்ளும் மிகச் சிலர் இருக்கிறார்கள். முற்கூறப்பட்டவர்களில் இவர்கள் ஒரு அளவு வேறுபட்டவர்களும் ஆவார்கள். ஒவியம், சிற்பம், படிமம் முதலியவற்றை ஆங்கில நூல்களின் மூலமும், தமிழ் நூல்களின் மூலமும் தெரிந்துகொண்டு பின்னர் நூல்களைத் தூரத்தே வைத்துவிட்டு நேரே பொருளோடு உறவாடத் தொடங்கிவிடுவார்கள். வேலைப் பட்டறைகளையெல்லாம் சென்று காண்பார்கள். வேலை முறையையும் வித்தியாசங்களையும் மனத்தில் வாங்கிக்கொண்டு விடுவார்கள். நீர்மாண வகைகள், வர்க்க பேதங்கள், மூர்த்தி பேதங்கள், ஆசன முறைகள், அஸ்த முத்திரைகள் முதலியவற்றில் தெளிவு ஏற்படுத்திக்கொண்டு விடுவார்கள். தமிழ் இலக்கியங்கள், வரலாற்றுச் செய்திகள், பக்திப் பாடல்கள், புராணத் தத்துவங்கள், தல புரானக கதைகள, காண பரம ப ைரக கதைகள இவற்றிலெல்லாம் கருத்தைச் செலுத்தி கவினுடையவற்றை மனத்திலும், கையேட்டிலும் பதித்துக் கொண்டு விடுவார்கள்.

இப்படித் தங்களைப் பக்குவப்படுத்திக் கொண்ட பிறகு சொல்லையும், சுவையையும் கல்லையும், செம்பையும் எல்லாம் கவைத்துச் சுவைத்து இன்புறும் இயல்பினராகி விடுகிறார்கள். பின்னர் அவற்றை அணுகுவதில் அவர்கட்கு அச்சமோ, அன்றி