பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 265

சங்கோஜமோ கூட ஏற்படுவதில்லை. அகம் ஒட்டிய, ஒன்றிய உறவே - - - - * } - - . . . .

கொண்டு விடுவார்கள். அபபடித தோய்ந்து துய்க்கும் கலையன்டர்

தொகை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கும்.

அத்தகைய சிறு தொகையினருள் சகோதரர் பாஸ்கரன் அவர்கள் ஒருவர். அவருடன் கல் பேசும். செம்பு இசை பாடும், கதைகள் எல்லாம் நடமாடும். அவற்றையெல்லாம் அவர் காண்டார். நோக்குவார். தேர்ந்து தெளிவார். அத்துடன் அமைவாரா? நண்பர்களை எல்லாம் கையைப் பிடித்து இட்டுச் செல்வார். சில முரண்டுகனைக் காதைப் பிடித்து இழுத்தும் செல்வார். கலைச் செல்வங்களின் முன்னே கொண்டு நிறுத்தி எல்லோரையும் துய்க்கும் படியும் செய்துவிடுவார். தாமின்புறுவதைக் கண்டு உலகின்புறச் செய்யும் வித்தையிலும் கைதேர்ந்தவர் சகோதரர் பாஸ்கரன் அவர்கள். எண்ணற்றவர்களின் வாழ்க்கையில், கலைப் பணியால் கடவுள் நம்பிக்கையையும் தெய்வ பக்தியையும் வித்திட்டு விளையச் செய்த புண்ணியனாகவும் அல்லவா விளங்குகிறார். அவர்களையெல்லாம் தலயாத்திரை செய்ய வேண்டும் என்ற வேட்கை கொள்ளவும் செய்துவிட்ட அருமையைப் பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன?

இலக்கிய ரசனையும், கலைப் பித்தமும், பக்தி ஈடுபாடும் ஒருசேரப் பெற்ற தனி வழியைக் கடைப்பிடித்துச் செல்லுபவர் ஆனதால் ஒன்றில் ஒரு சிக்கல் ஏற்பட்டால் மற்றொன்று வந்து கைகொடுத்துத் தீர்த்து வைத்துவிடுகிறது அவருக்கு. சிக்கல் விடுபடாதோ’ என்று பிறர் மயங்கக் கூடிய இடங்களில் அந்தச் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ளாமல் லாகவமாக அதைத் தாண்டி அப்பாற் சென்று விடுகிறார் இவர். பல இடங்களில் பெருமையாகப் புகழ்பாடுவதைக் கண்டு யாவரும் மகிழ்கிறோம். சில இடங்களில் கிண்டல் செய்வதைச் சிலர் ரசிக்க முடியாதவர்களாயிருக்கிறார்கள். என்றாலும், உண்மையை உணர்பவர்கள் யாரும் அதைக் குறை கூறமாட்டார்கள். கிண்டல் செய்வதற்கு மனத்துணிச்சல் மட்டும் பேதாதாது. களங்கமற்ற உள்ளத்தில் அரும்பிய எல்லையற்ற ஈடுபாடு வேண்டும். அப்பொழுதுதான் கிண்டல் பயன் தருவதாக இருக்கும். வெறும் மனத் துணிச்சலிலிருந்து வெளிப்படுவது கேவலம் வசையாகத்தான் அமையும்.

யதார்த்த வாழ்வில் அல்லது நாடகம், சினிமா போன்ற

துறைகளில் அசம்பாவிதம் என்று கருதி ஒதுக்கப்படும் தோற்றம், கல்லிலும் செம்பிலும் உருவாகி ஆலயங்களுள் இருப்பதை நாம்