பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 273

தாத்தாவின் உணவுப் பழக்கங்கள் கூட தாத்தாவின் செயல்களைப் போல மிக மென்மையானவை. தாத்தாவின் வாக்கிங் ஸ்டிக்கும், சரிகை அங்கவஸ்திரமும், தனி கம்பீரத்தையே தரும். எங்களுக்கெல்லாமோ அது ஒரு Status Symbol போன்றே தோன்றும். ஆனால் தாத்தாவுக்கோ, Status பற்றிய எண்ணமே இல்லாமல் எளிமையிலும் எளிமையாக இருப்பார்கள். ஆனால், அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே, எனக்கு, ஒரு கலெக்டரின் பேத்தி என்ற கர்வம் கூட மிக உண்டு.

தாத்தா எங்களை விட்டுப் பிரிந்தபோது, எனக்கு இறப்பின் வலி வேதனை எதுவும் புரியாத வயது. ஆனால் இப்பொழுது புரிகிறது, எவ்வளவு அன்பான, அருமையான மனிதரை இழந்திருக்கிறோம் என்று. வீட்டில் இருக்கும்போது எங்களையெல்லாம் விதவிதமாய் போட்டோ எடுப்பார்கள். வெளியூர் போய் வந்தால், எங்களுக்கெல்லாம் தினுசு தினுசாய் துணிமணி வாங்கி வருவார்கள். அப்படிப்பட்ட பாசமான ஒரு நல்ல மனிதரைத் தாத்தாவாகப் பெற்றதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர் களுடைய நூலைப் படிக்கப் படிக்கத்தான், அவர்களுடைய அழகின் ரசனைபுரியும். அந்த மகா ரசிகரின் சொல் செயல் எல்லாமே அழகுதான்.

தாத்தாவுக்கும் வாழ்வில் சோகங்கள் இல்லாமல் இல்லை. வளர்ந்த ஒரே மகனையும், கடைக்குட்டி செல்ல மகளையும் நோய் கொண்டு போன அவலங்கள் என்றும் அவர்களுடைய வார்த்தை யிலோ செயலிலோ வெளிப்பட்டதே இல்லை. அவர்கள் கலைஞானி மட்டுமல்ல. ஆன்மஞானியும் கூட. சொந்த சோகங்களை மனத்தின் ஆழத்தில் அழுத்தி, மனைவிக்கு அன்பான கணவராகத் தம் மக்களுக்கு அன்பான தந்தையாக, பேரப்பிள்ளைகளுக் கெல்லாம் பாசமான தாத்தாவாக இருந்ததோடு மட்டுமல்லாது, வெளி உலகுக்கு ஒரு பெரிய இலக்கிய மேதையாய், நல்ல கலா ரசிகராய், நேர்மை யும், திறமையும் நிறைந்த ஓர் அரசு அதிகாரியாய், பல்வேறு பரிமா ணங்களில் தொண்டைமான், ஓர் அழகான, அருமையான மனிதர்.

இப்போது சொல்லுங்கள், எங்கள் தாத்தாவின் உடலும் உள்ளமுமே அழகுதானே.