பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 293

சேலம் தமிழ்நாடன், பொன்னிலன், பிரபஞ்சன், எஸ்.கே. மயிலானந்தன், டாக்டர் ஜீவானந்தம் மற்றும் சிலர் தொ.மு.சி ரகுநாதனின் சிறப்பியல்புகளையும் இலக்கியப் படைப்பாற்றலையும் வியந்து பேசிய பின், தொ.மு.சி. ரகுநாதனின் முழக்கம் தொடங்குகிறது.

“இந்தப் பரிசு கிடைத்தமைக்காக நான் பாரதிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பாரதி பதினோறாவது வயதில் பாரதி என்ற பட்டம் பெற்றான். அதற்குப் பிறகு அவன் உயிரோடு இருந்த காலத்தில் எந்தப் பரிசும் எந்தப் பட்டமும் எந்த விருதும் அவனுக்குக் கொடுக்கப்படவில்லை. உ.வே.சாமிநாதய்யருக்கு மகாமகோபாத்யாய பட்டம் கொடுத்தபோது, அவரைப் பாராட்டி பாரதி பாடியிருக்கிறான். ஆனால் பாரதி செத்த பின்பும் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்த உ.வே.சாமிநாதய்யர், தாம் சாகிறவரை பாரதியை ஒரு கவிஞனாகவே ஒத்துக் கொண்டதில்லை.

1936 இல் சென்னையில் காங்கிரஸ் பொன்விழா நடந்தது. இந்தக் கூட்டத்தை ராஜகோபாலாச்சாரி ஏற்பாடு செய்திருந்தார். உ.வே. சாமிநாதய்யர்தான் தலைமை. கூட்டத்தில், “பாரதி மகாகவியா? இல்லையா? என்ற சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் எல்லாம் அவனை மகாகவியாக ஒத்துக் கொண்டுவிட்டோம். பாரதி மகாகவிதான் என்ற வாசகம் உ.வே.சாமிநாதய்யர் வாயிலிருந்து வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டத்திற்கு அவரை தலைமை ஏற்கச் செய்திருக்கிறோம்” என்றார் ராஜகோபாலாச்சாரி.

உ.வே.சாமிநாதய்யர் பேசுகின்ற போது, “தமிழ்ப் பண்டிதன் ஒருவனை கவிஞன் என்று சொல்லுகின்ற வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது” என்று மட்டுமே குறிப்பிட்டார். இதைத்தவிர, பாரதி மகாகவி என்றோ, தேசிய கவி என்றோ அவர் சொல்லவே. இல்லை.

“தாகூர் மதுரைக்கு வந்தது பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிட்டதைக் கேட்டீர்கள். 1913 இல் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்துவிட்டது. ஆறு வருஷம் கழித்து 1919 ஆம் வருஷம் மதுரை டவுன் ஹாலில் தாகூருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பாரதி, எட்டயபுரம் ராஜாவிடம் வேலை பார்க்க மறுத்து உதறிவிட்டு, காசிக்குச் சென்று, அதன்பின் சேதுபதி ஸ்கூலில் தமிழாசிரியராகப் பணியாற்றிவிட்டு, பின்பு பத்திரிகை ஆசிரியராகவும் பணி செய்தான். வறுமைநிலை. 1919 ஆம் ஆண்டு அதே எட்டயபுரத்துக்குத் திரும்பிப்போய் அதே எட்டயபுரம் மன்னரிடம் தமது பிழைப்புக்கு