பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

நான் எட்டயபுரம் சென்றால் இராமேஸ்வரம் சென்ற உணர்ச்சி எனக்கு ஏற்படுகிறது. அதே மாதிரி ஈரோட்டில் பெரியார் பிறந்ததினால் இதுவும் சேத்திரம், புண்ணிய ஸ்தலம்னு நினைக்கிறேன்.

1942 இல் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். 1925 இல் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. பொருளாதார விடுதலைக்காக ஒரு இயக்கம், அரசியல் விடுதலைக்காக காங்கிரஸ் இயக்கம் என்று பாரதிக்கு இருந்த ஒட்டுமொத்தப் பார்வை இல்லாமல், ஒவ்வொரு விடுதலைக்கும் ஒவ்வொரு இயக்கம் இங்கே இருக்கிறது. இந்த மூன்று இயக்கங்களுக்குள்ளும் ஒற்றுமை கிடையாது. பெரியார் காங்கிரஸை விமர்சித்தார். கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸை விமர்சித்தார்கள். கம்யூனிஸ்டுகளுக்கும், சுயமரியாதைக்காரர்களுக்கும் மோதல் வந்து, ஜீவா சுயமரியாதை இயக்கத்தை விட்டு வெளியேறி சமதர்ம இயக்கத்தைத் தொடங்கினார். இந்தச் சூழல் இன்றும் தொடர்கிறது. இதைத்தான் நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

பாரதிக்கு இருந்த ஒன்றுபட்ட, ஒருமித்த கண்ணோட்டத்தை இன்றைக்கும் நாம் உணரவில்லை. இன்று பெண்ணியம், தலித்தியம் என்றெல்லாம் பேசப்படுகிறது. தலித்துகளைப் பற்றித் தலித்துகள்தான் எழுத வேண்டும், மற்றவர்களால் தலித்துகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்றெல்லாம் இன்று பேசப்படுகிறது. தலித்திய எழுத்தாளர்கள் பற்றியும் பெண்ணிய எழுத்தாளர்கள் பற்றியும் ஆங்கிலத்தில் இப்போது நூல்கள் வெளிவருகின்றன.

இவர்களைப் பற்றி பிரிட்டிஷ் நாட்டிலுள்ள பதிப்பாளருக்கு என்ன அக்கறை? அதுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? இந்தியாவில் நடக்க வேண்டிய விடுதலைப் போராட்டம் ஒன்றுபட்ட போராட்டமாக இல்லாமல் எவ்வளவுக்கெவ்வளவு சண்டைகள் நடக்கிறதோ, ஆயிரமாயிரம் துண்டுகள் ஏற்படுகிறதோ அந்த அளவுக்குப் பிரிட்டிஷ்காரனுக்கு லாபம். முதலாளித்துவ வர்க்கத்துக்கு லாபம். அதனால்தான் அவன் இதைத்தொடர்ந்து செய்கிறான் என்று ஒரு விமர்சனம் உண்டு. அது எனக்குச் சரின்னுதான் படுது.

அதனால் பாரதி பற்றி நினைக்கின்றபோதும், இதுபோன்ற பாரதி விழாக்களில் கலந்து கொள்கின்ற போதும் பாரதிக்கு இருந்த ஒன்றுபட்ட கண்ணோட்டம், இந்த நூற்றாண்டிலாவது நமக்கு வந்தாக