பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 301

மயக்கின் மருள்தானோ? மாற்றமெனச் சொல்வதெலாம் இயக்கமிலா இயக்கத்தின் ஏமாற்றுப் பொருள்தானோ? இன்றேல் இவ் வாழ்க்கைக்கே ஏதுபொருள்? ஏதுபொருள்? என்றேயென் னுள்ளத்தில் எண்ணுகின்றேன். எண்ணுங்கால் -

ஒன்றே அதுவாக உருமாறும் மாயையல்லால் ஒன்றுமற் றொன்றாக ஒருபோதும் ஆவதில்லை என்றே வழக்காடி எதிர்க்கட்சி பேசுவதால் நன்றேதும் உண்டாமோ? நானிலத்தில் எந்நாளும் உறைந்த தயிர் பாலாக ஒருபோதும் ஆனதுண்டோ? கறந்திழிந்த பால்மீண்டும் கனமுலைக்கண் போனதுண்டோ? கருகிவிட்ட கட்டைதனில் கனல்புகுந்து மீண்டுமதை விறகாக்கித் தந்தருளும் விந்தை நிகழ்ந்ததுண்டோ? குடம்பை தனித்தொழியக் குஞ்சாகப் பெற்றிடுமோர் உடம்பும் குடம்பையினுள் உற்றொடுக்கக் கண்டதுண்டோ? விதையில் முளைத்தெழுந்து விகசித்த மரம்மீண்டும் புதையுண்ட விதையாகப் போனதுண்டோ? வழக்காற்றில் இன்றைக்கு நேற்றாகும் என்பதலால், இறந்தொழிந்து சென்றிட்ட நாள் இன்றாய்த் திரும்பிடுமோ? இவ்வாறாய் ஒற்றுமற்றொன் றாகிடுமோர் உலகியலின் உண்மையினை நன்றுணர்த்தும் சான்றுகளை நாமுணர மாட்டோமோ? ஒன்றுமற்றொன் றாவதுவே உலகியலோ? வேறுண்டோ? என்றும் நான் எனக்குள்ளே எண்ணுகின்றேன். எண்ணுங்கால்

வித்தொன்று முளைத்தோங்கி விகசித்து விளைந்தக்கால் கொத்தாகப் பலவித்தும் குலைதள்ளிக் காய்க்காதோ? பெட்டைச் சிறுகோழி முட்டைவழிப் பிறந்தாலும் பிட்டி வலியெடுக்கப் பெறுங்காலம் அக்கோழி ஒற்றைக்கோர் முட்டையுடன் ஒய்தல் வழக்காமோ? பெற்றமுட்டை அத்தனையும் குஞ்சாகப் பெயராதோ? வித்தும் மலையாகும் வெடித்துவந்த குஞ்சுகளும் பத்தாகும் நூறாகும் பதினா யிரமாகும் ஒன்றே பலவாகும் உருவான பற்பலவும் குன்றாகும் மலையாகும் இமயக் கொடுமுடிபோல் நின்றோங்கும் எனுமிந்த நியதியுல கறியாதோ?