பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

பற்பலவாய் ஒன்றாங்கே பல்கிப் பரந்துலகில் உற்பவித்த பின்னதுவே ஒன்றாய் ஒடுங்கிடுமோ? பலவாகிப் பலவாகிப் பரவுபரி ணாமத்தால் நிலவுகின்ற உலகியலின் நியதியினை நாமறிந்தால், ஒன்றே பலவாகிப் பலவற்றில் உறைந்தொளிரும் பொன்றாத பேரியக்கப் பொருளதனைப் புரிந்திட்டால், நான்ஒருவன் ஆனாலும் நாமறியாக் காலமுதல் மாநிலத்தில் உற்பவித்த மானிடமாம் சாகரத்தில் ஒருதுளியாம் என்றறியும் உணர்வுதனைப் பெற்றுவிட்டால், வருநாளில் இத்துளியே வழிவழியாய் வளர்ந்தோங்கிப் பெருகும், பெருகியொரு பெருங்கடலாய் மாறுமென்று கருதுகின்ற பக்குவத்தைக் கண்டறிந்து கொண்டுவிட்டால், என்னில் உலகதனை, உலகியலில் என்னிடத்தை உன்னி உணர்ந்தறியும் உள்ளொளியை ஏற்றிவிட்டால், முன்னைப் பழமையிலும் முளைத்துவந்த வாரீசாய், பின்னைப் புதுமைக்கும் பீடிகையாய் நான்வாழ்ந்தால், என்றைக்கே வாழ்ந்தாலும் என்றென்றும் வாழேனோ? என்றெண்ணிப் பார்க்கின்றேன். எண்ணுங்கால்... எண்ணுங்கால்...