பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 307

பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே! ஜய ஜய என்ற ராஜ கம்பீரமான பல்லவி பிறந்து விடுகிறது.

ஆம், பாரத சமுதாயம் வாழவேண்டும். பாரத நாட்டிலுள்ள ஒரு சிலரல்ல. சமுதாயத்திலுள்ள அனைவரும் வாழவேண்டும். அவ்வாறு வாழ வழியென்ன? எப்படிப்பட்ட வாழ்க்கை முறையினால் பாரத சமுதாயம் ஜெய கோஷமிட்டு வாழ முடியும்? இந்தச் சிந்தனையிலிருந்து பாட்டின் அனுபல்லவி பிறக்கின்றது. ஆம் வாழ வழியுண்டு. எந்த வழி?

முப்பது கோடி ஜனங்கன் சங்கம்

முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பில்லாத சமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை!

பாரதி திட்டவட்டமாகக் கூறி விடுகிறான், பொதுவுடைமைதான் அதற்கான வழி என்று. இந்தப் பொதுவுடைமையையும் அவன் எப்படிக் காண்கிறான்? சமுதாயம் என்பது நெல்லிக்காய் முட்டையைப் போல இல்லாமல் ஜனங்களின் சங்கமாக இருக்க வேண்டும். அத்தகைய கட்டுப்பாடும் ஒற்றுமையும் கொண்ட சமுதாயத்தின் முழுமைக்கும் பாரத நாட்டுச் செல்வங்கள் பொதுவுடைமையாக வேண்டும். பொதுவுடைமை என்பது ஒரு சில துறைகளில் மட்டுமல்ல. எல்லாத் துறைகளிலும் பொதுவுடைமை. அவ்வாறு எல்லாத் துறைகளிலும் தனியுடைமையின் பிடிப்பு தகர்ந்து பொதுவுடைமை உருவாகும் போது, அந்தச் சமுதாயம் ஒப்பில்லாத சமுதாயமாக மாறும், உலகத்துக்கொரு புதுமையாக, இதுவரை உலகம் காணாத புதுமையாகத் திகழும் என்பது பாரதியின் நம்பிக்கை.

ஆனால், இத்தகைய சமுதாயத்தை, புதுமையை உருவாக்கத் தடையாக இருக்கும் சக்திகள் என்ன? இதனை எண்ணும்போது, தனியுடைமையின் பேரால் இந்த உலகத்தில் மனிதனை மனிதன் சுரண்டி வாழும் முதலாளித்துவ வாழ்க்கை பாரதியின் கண்ணில் தோன்றுகிறது. இந்தச் சுரண்டல் மனிதனுக்கு மனிதனை எதிரியாக்குகிறது. மனிதனுக்கு மனிதனை அடிமையாக்குகிறது. மனிதனுக்கு மனிதனை துன்பத்துக்குள்ளாக்குகிறது. சுரண்டலினால் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். வறுமைப்படுகிறார்கள். உணவுக்குக் கூட வழியின்றி நோகின்றார்கள். எனவே சமுதாயம் முழுவதும் வாழ வேண்டுமென்றால், பிறர் உழைப்பை, உணவை, உடையை,