பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 309

வழக்கத்தை அடியோடு தொலைத்துத் தலைமுழுக நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்குப் பாரதி பின்வருமாறு வழி சொல்கிறான். இனியொரு விதிசெய்வோம் - அதை

எந்த நாளும் காப்போம் தனியொருவனுக்கு குணவிலையெனில்

ஜகத்தினை அழித்திடுவோம். இங்கேதான் நாம் பாரதியின் புரட்சியை, தமிழ் இலக்கிய உலகம் அதுவரையில் காணாத ஒரு புதுமையைக் காண்கிறோம். புதிய குரலைக் கேட்கிறோம். எப்படி? நாம் வாழ்வதற்குப் பாரதி புதிய விதி கூறுகிறான். இதுவரையில் எத்தனையோ சட்ட திட்டத்தை நாம் கண்டுவிட்டோம். அர்த்த சாஸ்திரம் முதலிய பல்வேறு சட்ட நூல்களிலிருந்து இந்தியன் பீனல் கோடு வரையிலும் கண்டுவிட்டோம். இவை எவையும் சமுதாயம் முழுமைக்கும் வாழ்வளிக்கவில்லை. வாழ்வை உத்தரவாதம் செய்யவில்லை. எனவே இனி நாம் ஒரேயொரு சட்டத்தை மட்டும் செய்துகொள்வோம். அது என்ன? இந்த உலகத்தில் எந்தவொரு தனிமனிதனும் மனிதனாகப் பிறந்த எவனும், உணவில்லை என்ற காரணத்தால் பட்டினி கிடக்கக்கூடாது. கிடந்தால் உலகத்தையே சுடுசாம்பலாக்குவோம் என்பதுதான் அந்தச் சட்டம். ஆனால் வாழ்க, வாழ்க என்ற வாழ்த்து வந்த பாடலில் இப்படி அபகரம்போல் அழித்திடுவோம் என்று பாடலாமா? ஆனால் இந்த எதிர்மறைச் சொல்தான் பாரதியின் புரட்சிக்கு வேகம் கொடுக்கிறது. நாம் உலகை அழிக்க விரும்பவில்லை. காக்கவே விரும்புகிறோம். எனவே உலகம் அழியாமல் காக்கப்பட வேண்டுமென்றால் இப்படியொரு கண்டிப்பான சட்டத்தை நாம் உருவாக்கிக் கொள்வதோடு, அதற்குக் கண்ணாடிச் சட்டம் போட்டு, மாலையிட்டுக் கும்பிட்டுக் கொண்டிராமல், அதனை எந்த நாளும் காக்கவும் வேண்டும். அவ்வாறு காத்தால், அதாவது உலகத்தில் வறுமை எவ்விதத்திலும் தலைதூக்காது நாம் பார்த்துக் கொண்டால், உலகமும், பாரத சமுதாயமும் வாழத்தான் செய்யும், வாழாமற் போகாது. -

ஆனால் இந்தத் தரித்திரம் பிடித்த நாட்டில் ஆன்மிகச் செல்வத்துக்கு மட்டும் குறைச்சலில்லை. மனிதர்கள் எல்லோரையும் மகேசுவரனின் அவதாரங்களாகக் கூறும் மலட்டு வேதங்களுக்கும், சாஸ்திரங்களுக்கும் குறைச்சலில்லை. மனிதனுக்கு வயிறுநிறைந்தால் மட்டும் போதாது. இதயமும் நிறையவேண்டும் என்று இந்த வேதங்கள் கூறுகின்றன. ஆம். உண்மைதான். ஆனால் இதயம் மட்டும் நிரம்பி, வயிறு நிரம்பாமல் இருக்கலாமா? “வயிற்றிலே ஈரத்