பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 6 |

ஓங்கி ஒரு தடி கொண்டு

உச்சந்தலை தாக்கி

தாங்க வலியற்ற அந்தத்

தலைவனையே முடித்துவிட்டான்.

கல்லாய்ச் சமைந்துவிட்டார்

கற்றவரும் மற்றவரும்

எல்லாரும் நின்றிருந்தார்

என்செய்வ தென்றறியாமல்

‘இனி நமக்கு வழிகாட்டி யாரே!’ எனப் புலம்பி தனித்தனியே தவித்தார்கள்

பதைத்தார்கள்,

இனி நமக்கு வழிகாட்டி

நாம் கொன்ற உத்தமனே! அன்னவன்தன் அடிச்சுவட்டில்

அயராமல் நடந்திடுவோம்

என்று முழங்கி ஒர் அறிஞன்

எல்லோர்க்கும் முன் நடந்தான்

நன்றென்றார் மற்றவரும்

நாணித் தலை குனிந்து

அண்ணல் மறைந்தாலும்

அவன் அமரன் என்றுணர்ந்து திண்ணிய நெஞ்சமுடன்

தலை நிமிர்ந்து நின்றார்கள்.

மூலம் : ரவீந்திரநாத தாகூர் தமிழில் : பாஸ்கரன்