பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 எங்கள் கவிராயர்

—-—

O

“அட எருமைமாடுகளா! கழுதைகளா! ஒருதரம் சொன்னால் புத்தியில்லை? ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள்?’ என்று ஒரு ஆசிரியர் மூக்கின் மேலிருக்கும் கண்ணாடியை நெற்றிக்குத் தள்ளிக் கொண்டு, ஆறாம் பாரத்தில் உள்ள ஐம்பது மாணவர்களைக் கோபித்தால், மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? உடனே, “இப்படி எல்லாம் எங்களை பேசலாச்சா? எங்களுக்கு சுய மரியாதை கிடையாதா? உடனே ஸ்டிரைக் பண்ணுவோம் வாருங்கள்” என்று எழுந்து மாணவர்கள் வெளியே சென்று விடுவார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. அப்படியெல்லாம் மாணவர்கள் ஸ்டிரைக் பண்ணுவது 1946 ஆம் வருஷத்திலே நடக்கலாம். ஆனால் 1922 லே ஆம், இருபத்திநான்கு வருஷத்துக்கு முன்பு நடக்கவில்லை. காரணம், அப்போதுள்ள மாணவர்களுக்குச் சுயமரியாதையும், சுதந்திர உணர்ச்சியும் கிடையாது என்பதில்லை. இப்படியெல்லாம் திட்டுகிற உபாத்தியாயர் யார் என்றுதான் கேள்வி. அப்படித் திட்டிய வாத்தியார்தான் எங்கள் தமிழ்ப் பண்டிதர் மேலகரம் ரீ சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள். அவருடைய திட்டுகளையெல்லாம், இந்து கலாசாலையில் அன்று படித்த மாணவர்களாகிய நாங்கள் ஆசீர்வாதமாகவே கொண்டோம், திட்டியவர் உள்ளத்தில் யாதொரு கல்மிஷமும் இல்லாத காரணத்தினால், திட்டி முடிந்ததும் வகுப்பில் குப் என்று ஒரே சிரிப்பு. அதன் பின் அமைதி. இதெல்லாம் தினசரி வகுப்பு ஆரம்பிக்குமுன் நடக்கும் சம்பவம். தமிழ் வாத்தியார் கிளாஸ் என்றால் அது விளையாடும் நேரம், விடுமுறை எடுப்பதற்குரிய காலம் என்றெல்லாம் அந்தக் காலத்து மாணவர்கள் சிலர் எண்ணியிருந்ததுதான் அப்படியெல்லாம் வகுப்பு ஆரம்பிக்குமுன் மாணவர்கள் கும்மாளி போடுவதற்குக் காரணம். ஆனால் வகுப்பில் பாடம் ஆரம்பித்துவிட்டாலோ அதை விடக் கும்மாளிதான், கவிராயர்