பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

வடநாடிருந்து தென்னாடு வந்த குறுமுனிவன், என்று முளதென் தமிழை இயம்பி இசை கொண்டான். அந்த முனிவன் ஸ்தானத்தில் இன்று தமிழர்களிடையே இருப்பவர்கள் முதலியாரவர்கள்தான். இக்குறு முனியைக் காண விரும்புபவர்களுக்கு ஒரு வார்த்தை. தென்னிந்திய ரயில்வேயில், பாவூர் சத்திரம் ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கட்டு வாங்குங்கள். அந்த ஸ்டேஷனிலுள்ள வண்டிக்காரர்களிடம் வெள்ளக்கால் பட்டணத்து ஐயா வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொல்லுங்கள். அவ்வளவுதான் வண்டிக்காரர்கள் உங்களை அல்லாக்காய் தூக்கிக் கொண்டுபோய் முதலியாரவர்கள் முன்னிலையில் இருத்திவிடுவார்கள். பின்னால் நடக்கும் தமிழ் விருந்தில் (ஏன்! வயிற்று விருந்திலுந்தான்) என்னை நினைத்துக் கொள்ளுங்கள்.

அர்ச்சுனன் கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம்