பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

என்று பாடி ஏங்கியதை தமிழ்நாடு நன்கறியும். இன்னும் அவரது வீட்டுத் தோசை இலக்கிய அந்தஸ்தையே பெற்ற ஒன்று. அத்தோசையை உருவாக்குவதில் பெரும் பணி டிகேசியின் துணைவியார் அண்ணியைச் சார்ந்ததே.

அண்ணி சுட்ட தோசையை ஆசையோடு தின்றவர் எண்ணிலாதார் அல்லவோ

அதில் யானும் ஒருவன் அல்லனோ என்று இளங்கவிஞர் ஒருவர் பாடினால் ஆம், ஆம், நானும் அக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவனே, என்று இன்றும் கும்மாளம் போடுவார் பலர் உண்டுதான்.

அந்த அமரர் ரசிகமணிதான் பொதிகை முனிவர் அகத்தியரைப் போல் நம் கண்முன் வாழ்ந்தவர். என்றும் வாழ்பவர்.

கன்னித் தமிழே போல்

கம்பன் கவியே போல் மன்னும் பொதியை

மலையே போல் - பண்ணுநம் நாடுமகிழச்

சிதம்பரநாத நண்பா நீடுழி வாழ்க நீ என்று கவிமணியுடன் சேர்ந்து வாழ்த்தி வணங்கி அவர் நினைவு நாளை தமிழகம் கொண்டாடினால் அது போதும்.

தொண்டைமான் மணிவிழா மலரை எஸ். மகராஜன் வெளியிடுகிறார்.