பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

என்றார்கள். இத்தகைய பாராட்டுப் பெற்ற பின்தான் எனக்கும் பாடல்கள் எழுதலாம் என்று துணிவு பிறந்தது. கவிமணி மெச்சிய கவிஞனாக அல்லவா ஆகிவிட்டேன் நான் அன்று.

இப்படித்தான் நேரில் கவிமணியுடன் அறிமுகம் ஆனேன் நான் இருபது வருடங்களுக்கு முன்பு. இந்த இருபது வருஷ காலத்தில் அவர்களை இருபது முறையாவது நேரில் சந்தித்திருப்பேன், கண்டு அளவளாவி இருப்பேன். அவர்கள் பாடல்களைக் கேட்டு பரவசம் அடைந்திருப்பேன். அவர்களுடன் பேசும் போதெல்லாம், அவர்களுடைய எளிய வாழ்க்கையும், அவர்கள் தூய உள்ளத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் கவிதா சன்னதத்தையும் கண்டு கண்டு மகிழ்ந்திருக்கிறேன். நாடிப்புலங்கள் உழுவார் கரமும் நயஉரைகள் தேடிக் கொழிக்கும் கவி வாணர் நாவும், செழுங்கருணை ஒடிப்பெருகும் அறிவாளர் நெஞ்சும், உவந்து நடம் ஆடிக் களிக்கும் மயிலே, உன்பாதம் அடைக்கலமே. என்று அற்புத வணக்கம் செய்கிறார்கள் கலைமகளுக்கு தன் கவிதை மூலமாக நய உரைகள் தேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவையும் நான் அறிந்து அறிந்து மகிழ்ந்தது அவர்களிடம்தான். தான் எழுதிய பாட்டின் இலக்கணத்திற்கு இலக்கியமாகவே அமைந்திருந்தார்கள் கவிமணியவர்கள்.

ஒரு தடவை நானும் நண்பர் முத்துசிவனும் கவிமணியவர்களைக் காணச் சென்றோம். அப்போது தான் நண்பர் முத்துசிவன் அசோகவனம் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார். அதில் கவிதையைப் பற்றி வருகிற கட்டுரையில் வெய்யிற்கேற்ற நிழலுண்டு, என்ற கவிமணியின் பாடலைப் பாராட்டி பல சொல்லியிருந்தார். ஆனால் ஒரு விமர்சகர் அந்தப் புத்தகத்தை விமர்சனம் செய்யும் போது, இந்த வெய்யிற்கேற்ற நிழலுண்டு என்ற பாட்டு, வெறும் மொழிபெயர்ப்புத் தானே, பெரிய கவிதை ஒன்றும் இல்லையே என்று எகத்தாளமாக நையாண்டி பண்ணியிருந்தார். இதைப் படித்திருக்கிறார்கள் கவிமணி. “என்னைத்தான் விமர்சகருக்குப் பிடிக்கவில்லை. இந்தப் பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரசமரத்தையும் சேர்த்தல்லவா பிடித்திருக்கிறது. என் கவிதையை இவர் பாராட்ட, இவரே அல்லவா தாக்குதலுக்கு உட்பட்டுவிட்டார்” என்று நகைச்சுவையோடு அந்த விமர்சனத்தைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, பிற பாஷைகளில் உள்ள நல்ல