பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

என் உள்ளத்தை விட்டு என்றுமே அகலுவதில்லை. எத்தனையோ பாத்திரங்களின் உள்ளங்களில் எல்லாம் நுழைந்து அவர்கள் ஆசாபாசங்களை எல்லாம் சாங்கோபாங்கமாக வாசகர்களுக்குக் கூறும் எழுத்தாளர், இத்தனை குழந்தையுள்ளம் படைத்தவராக இருக்கிறாரே என்று எண்ணி எண்ணி நான் மகிழுவதுண்டு. பல வருஷங்களுக்கு முன், ராஜியின் பிள்ளை என்று ஒரு தொடர் எழுதினார். அதை எப்படி எழுதினர் என்று கேட்டேன். சொன்னார். “என் மனைவி ராஜி இருந்து அவள் பிள்ளையைப் பெற்றெடுத்து என் கைகளில் கொடுத்திருந்தால், அந்தப் பிள்ளை எப்படி இருந்திருக்கும், அந்தப் பிள்ளையை எப்படி நான் கொஞ்சியிருப்பேன் என்று இரவு பகலாகக் கற்பனை பண்ணிக் கொண்டே இருந்தேன். அந்தக் கற்பனையில் பிறந்தவன்தான் ராஜியின் பிள்ளை” என்றார். இதைக் கேட்கக் கேட்க ஐயோ பாவம் ராஜி மறைந்து பத்து வருஷங்கள் கடந்த பின் திரும்பவும் மணம் முடித்து மகப்பேறு விரும்பி நின்ற இந்தத் தேவன் அந்த காயம் தீராமலேயே மறைந்துவிட்டாரே என்று எண்ணுகிறபோது அவர் முழுக்க முழுக்க நம்பிய அந்த சண்முக நாதன் பேரில் எவ்வளவோ கோபம் வருகிறது, இப்படி நம்பியவரை மோசம் செய்துவிட்டானே என்று.

ஆனால், நண்பர் தேவன் அந்த சண்முக நாதன் பேரில் கொண்டிருந்த நம்பிக்கையை கடைசி வரை இழந்துவிடவில்லை. இதைப் பார்க்கிறோம். அவருடைய லக்ஷ்மி கடாட்சம் என்ற கதையிலே. கதாநாயகி காந்தாமணி கொழுத்த பணக்காரன் மகா துர்த்தன் வேணுகோபாலனிடத்துச் சிக்கிக் கொள்கிறான். அப்போது அவன் கையிலிருந்து அவள் தப்பிக்க அவள் உபயோகித்த ஆயுதம், அந்த கந்த ஷஷ்டி கவசத்தையே. -

பெண்களைத் தொடரும்

பிரம ராக்ஷதரும் அடியனைக் கண்டால் நில்லாதோட

நீ எனக்கு அருள்வாய் என்று உருப்போட உருப்போட, வேணுகோபால் நண்பர் சிங்காரம் வந்து இடைநின்று காந்தாமணியை மீட்கிறார் என்று கதையை நடத்தும் முறையை அறிந்தால், தேவனது முருக பக்தி எத்தனை அழுத்தமானது என்று தெரியும். அந்த பக்தியிலேயே தான் திளைத்தார் இத்துணை வருஷகாலமும். அது காரணமாகவே தம் கதைகளில் எல்லாம் திருத்தணி முருகனை வடபழனி