பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

தமிழ்ப் பற்றும் இன்னும் வளர்ந்திருக்கிறது. அப்போதுதான் கிறிஸ்து பெருமானின் போதனைகளைக் கேட்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருக்கின்றார். கிறிஸ்டின் பால் என்ற பெயரையும் ஏற்றிருக்கிறார். பின்னரே சென்னைச் சட்டக் கல்லூரியில் படித்துப் பிஎல் படித்து பாஸ் செய்திருக்கிறார். இவரது பள்ளித் தோழர் ரசிகமணி டிகேசி என்றால், கம்பன் பக்தி வளர்வதற்கு கேட்பானேன். கம்பனது காவியத்தைச் சாத்திரக் - *** ----- கண்கொண்டு, காய்தல் உவத்தல் ஏ.சி. பால்நாடார் இன்றி நுணுகி ஆராய்வதில் அவர் ஒரு நிபுணர். கம்பனது காலத்தை நிர்ணயிப்பதிலே எத்தனையோ இடர்ப்பாடுகள். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் கம்பனது காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டே என்று சொல்ல, பால் நாடார் அது தவறு. கம்பன் காலம் ராஜராஜ சோழனுக்கும் முந்திய ஒன்பதாம் நூற்றாண்டே என்று தக்க காரணங்களோடு தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கியிருக்கிறார். தமிழ் கல்சர் என்ற ஆங்கிலப் பத்திரிகையிலே அவர் எழுதி வந்தது இன்னும் முற்றுப்பெறவில்லை என்று நினைக்கிறேன். இப்படி ஆணித்தரமாக அவர் கம்பனை, தலைமை தாங்குவதோடும், சொற்பொழிவுகள் நிகழ்த்துவதோடும் அல்லாமல், மற்றைய இளைஞர்கள் பேச்சில் காணும் நயங்களையும் ஏன் குறைபாடுகளையுமே அவர்களிடம் நேரில் சொல்லி உத்சாகப்படுத்தினார். பால் நாடார் அவர்கள் குடும்பம் நல்ல தமிழ்ப் பண்பாட்டிலே ஊறித் திளைத்தக் குடும்பம். வைத்தியமே தொழிலாகவும், இசையே மூச்சாகவும் கொண்ட தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இவர்களது மாமனார். இவர்களது துணைவியார் செளந்திரவல்லியம்மையும், மைத்துனர் சுந்தரபாண்டியன், ஜோதிப் பாண்டியன், குணபாண்டியன் முதலானோர் நல்ல சங்கீத விற்பன்னர்கள், வீணை வித்துவான்கள். இவர்களது மூன்று பெண்மக்களே கமலவல்லி, திலகவதி, வேதவல்லி என்பவர். மற்றையவர்கள் இந்து சமயத்தைத் தழுவிய தமிழன்பர்கள். இவர்கள் வக்கீல் வாழ்க்கையைத் தொடங்கியது தூத்துக்குடியிலே. அங்கே தான் அறிவுடைமைக்கும், வாதத் திறமைக்கும் இவர்கள்