7 கண்டு மெய் மறக்கின்றான். ஆனால் அப்படியே சிறிது நேரங் கூட அவன் கழிக்க இயலவில்லை. - று பயிர் செய்த பாட்டாளி ஓடோடி வருகின்றான். உரக்கக் கூவுகின்றான். கலையுணர்வாளனைக் கண்ணற்றவன் என்று கருதுகின்றான். கலையுணர்வளித்த அக்காட்சி சிதைகிறது. பாட்டாளியின் கல்வீச்சால் கலைஞன் சிந்தனைகளும், சிதறிய புறாக்களைப் போலவே பறந்தன. பாட்டாளி அந்த வயல் விளைச்சலால் - தனது பெரிய குடும்பத்தை, மனைவியையும் மக்களையும் - காப்பாற்ற வேண்டியவன். அதன் விளைச்சல் இப்படிப் பாழாய்ப்போவது கலையானாலும் அதைக் கலைக் கத்தானே செய்கிறது அவன் வாழ்க்கை உண்மை ? கலை யை அழிப்பதா என்று அவன்மீது அறிவுடைய எவரும் வருத்தப்பட்டுக் கொள்ள முடியுமா ? கலையைவிட வா ாழ்க்கை யிலேயே உரமும் உண்மையும் நிறைந்து காணப்படுகிற தல்லவா? - வேடனும், பாட்டாளியும் கலையின் விரோதிகள் என்று கூறமுடியுமா? வேடன் வில்வித்தையிலே வலிவான உடற் கட்டிலே அழகிய மலைச் சாரலிலே கலையைக் காணு காணுகிறான். பாட்டாளி பழங்கதையிலே, படத்திலே, பசுக் கூட்டத்திலே, கிளிப் பேச்சிலே குழந்தை மழலையிலே, கலையைக் கா ணு கிறான், மகிழ்கிறான். ஆனால் வாழ்க்கையை எதிர்க்கும் கலை, எதுவானாலும் எதிர்க்கும் நேரத்திலே - தோல்வியடை கிறது, சிதைகிறது. நல்லபாம்பு படமெடுத்தாடினால், பார்ப் பதற்கு அழகாகத்தா னிருக்கிறது. அதன் ஆட்டத் திலே ஓர் கலையைக் காணலாம். ஆனால் அதனுடைய பல் பிடுங்கப் படாத வரையில் அந்தக் கலையிடத்தே நெருங்கமுடியாது அதுமட்டுமல்ல. அது கலையென்பதற்காக அதனை விட்டு விட்டால் வேறோர் நாள் அக்கலை நம்மைத் தீண்டிவிடும். வைரக்கல்லும், தங்க நகையும் அழகுப் பொருட்கள் ; கலையுணர்ச்சிக்குத் துணை செய்வன. ஆனால் அதே அழகுப் பொருட்கள் ஆபத்துக்கும் துணையாகி விடுவதைக் காணு கின்றோம். ஆகவே இங்கெல்லாம், கலையே சில பல சமயங்
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/13
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை