8. களில் வாழ்க்கைக் கொலையாக முடிவதையும் காணலாம் கலை வாழ்க்கையிலே வளத்தையும், மனத்திலே எழுச்சியை யும், உணர்விலே ஓர் இன்பத்தையும் ஊட்டுவதை நான் மறுக்கவில்லை. ஆனால் கலை யென்பதற்காக, கவலையின்றி அத னைக் கைக்கொள்வது தற்கொலையே யாகும். 1 காலையே யாகும். உதாரணமாக இசைக் கலையை எடுத்துக் கொள்வோம். இசை ஒரு சிறந்த கலை; எவரையும் இசைவிக்கும் கலை, எவ ரும் இழக்க விரும்பாத கலை; ஆனாலும் சமண சமயத்தவர்கள் சையை வெறுத்தார்கள் எனபதை அறிவோம். ஏன் ? இசைக்கலையில் இன்பத்துடன் மயங்கவைக்கும் ஒருவித தன்மையையும் கண்டார்கள். அவ்வாறு மயங்க நேரிடும் போது, அறிவு மயங்குவதை உணர்ந்து, இசையை வெறுத் தார்கள். ஆனால் நாம் இசைக்கலையையே குறை கூ கூறவில்லை. இசைக்கலையால் ஏற்படும் மயக்கம், மககளுடைய நன்மைக் காகவே இருக்க வேண்டுமேயன்றி மக்களைப் பாழ்படுத்து வதற்குத் துணையாகக் கூடாது என்றே கூறுகிறோம். உழைத்து அலுத்தோர், களைப்படைந்தோர், கவலைகொண் டோர் ஆகியோருக்கு இசை உணர்வு, இளைப்பாறுவதற்குப் பயன்படுவது நல்லதே த ஆனால் இசையிலேயே மயங்கி, "ரோம் பற்றி எரிந்தபோதும் யாழ் வாசித்த நீரோபோல இசையின்பத்தி லாழ்ந்து, கடமையை நிறைவேற்றாது, பிறர் உழைப்பை உறிஞ்சி சோம்பேறியாய் வாழ இசை துணையாகுமானால் அது கொடுமையாகும். இங்கே இசைக் கலைஞரை யான் குறிப்பிட வில்லை. இசை குறிப்பிடவில்லை. நுகர்வோரைத் தான். பெரிய பிளவை மருத்துவம் (ரணசிகித்சை) செய்வ தற்கு முன்னால் மயக்க மருந்து கொடுக்கப்படுவது அவசிய மானதே. சிறிய சிகித்சையானாலும், மயக்க மருந்து கூடு மானால், தேவையானால் கொடுக்கலாம். குழந்தையைத் தூங்கவைக்க,மயக்க மருந்து கொடுப்பது தவறு. அதை விட உழைக்காமலே இருந்தும் அதை உணர்ந்தும் மாலை நேரத்திலே உயர்ந்த மேல் நாட்டுச் சரக்குகளிலே உலகினை 99
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/14
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை