பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 விளக்குவதே கடினம். கலையென்றால் அழகுணர்ச்சியைத் தோற்றுவிப்பது. உள்ளத்தைக் கவர்வது என்று உடனே கூறலாம். அழகுணர்ச்சியைத் தோற்றுவிக்கும் எல்லாப் பொருளும் கலையாகுமா? என்று எண்ணினால் இல்லை யென்றே தோன்றுகிறது. ஏனெனில் அவையெல்லாம் கலை யுணர்ச்சியைத் தோற்றுவித்தாலும் கலையென்று கூறப்படுவ தில்லை. மற்றும், எல்லாப் பொருள்களும் எல்லோருக்கும் அழகுணர்ச்சியைத் தோற்றுவிப்பதில்லை. சிறந்த கலைஞ னுக்கோ, எல்லாப் பொருளிடத்திலும் அழகுணர்ச்சி தோன்றுகிறது. எளிய மனிதனுக்கோ, உயர்ந்த பொரு ளிடத்திலும் அழகுணர்ச்சி தோன்றுவது அருமையாகிறது. மனிதன், தான் வழக்கமாகச்செய்யும் செயல்களை எண் ணிப் பாராதது போலவே, தான் நெருங்கிப் பழகும் பல பொருள்களையும் கூர்ந்து கவனிப்பதில்லை. ஆகவே, அவைக ளிடத்தில் அழகுணர்ச்சி தோன்றுவதில்லை. ஆனால் கலை ஞனின் பார்வையில், அந்தக் கலையுணர்வு இருப்பதாலேயே, நாம் கண்டு பழகியவற்றிலேகூட, நாம் கண்டறியாத புது மையை வெளிப்படுத்துகின்றான். அழகையே நம் எதிரில் நிறுத்தினாலும் அழகு அழகாகத்தான் இருக்கும், ஆனால் கலைஞனின் எதிரில், அழகு-மறைந்து நின்றாலும்-அணங்கு போலச் சிரித்திடும். அழகின் சிரிப்பிலே-புரட்சிக் கவிஞர் அவர்கள், அழகினிடத்திலே கவிதைபெறுகிறார்; நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில் நாடகத்தைக் காணுகின்றார். மற்றும் பலப்பலவும் கண்டார். கவிஞர் காண் பிக்காவிட்டால், இவைகளை நாம் காணுமாறுண்டோ? ஆகவே கலையென்பது, மனிதனைச் சுற்றியுள்ள ஒவ் வொரு பொருளிலும், நிகழ்ச்சியிலும், அமைந்துள்ளது உண்மையானாலும், அது, மனிதன் உள்ளத்தில் பதியும் போதுதான், உணர்வில் கலக்கும்போதுதான், கலையாகிறது. அந்த உணர்ச்சி தோன்றக் காரணமாவதையே நாம் யென்று வழங்குகிறோம். 6 கலை