பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பெற அமைந்து விடுகிறது. வாழ்க்கை து நுகர்ச்சிகளை வகை வகையாய்ப் பிரித்தெடுத்து அவற்றின் முழு அழகு தோன்ற அணிபெறத் தொகுத்தளிப்பது கலை. வாழ்க்கை நுகர்ச்சிகளுக்கு உண்டான தேவைகள் பூர்த்தி செய்யப் பட்ட இடத்தில் எழுவது கலை. தேவையைப் பூர்த்தி செய்துகொண்ட குடும்பங்களே எப்படி உணர்வுக் கலையிலே பெருவாரியாக ஈடுபடுவ தைக் காண்கிறோமோ அப்படித்தான் தேவையைப் பூர்த்திசெய்து கொள்ளுகிற நாடுகளிலே தான் உணர் வுக் கலை வளர்வதையும் காணமுடியும். உணர்வுக் கலையே பெரிதும் இடம் பெற்றால் பொருட் கலை தடைப்படும். பொருட் கலை தடைப்பட்டுத் தேவை நிறைவேறாவிடில் அதன் விளைவாகவே உணர்வுக் கலையும் வளர்ச்சி குன்றி விடும். அந்த நிலையிலேதான் இன்று நம் நாடும் காணப்படு கின்றது. நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட கலை காலத் தோடு ஒட்டி வளர்வது. இடத்திற்கு இடம் கலையிலே வேற்று மையையும் காணப்படும். கலை எல்லா காலத்திலும், எல்லா இடத்திலும் ஒன்றாகவே இருக்காது. அங்கங்கே வாழும் மக் களின் மனப்பண்பிற்கும் தட்ப வெப்பத்திற்கும் சுற்றுச் சார்புக்கும் நாகரிக வளர்ச்சிக்ரும் எற்ப - அந்தந்த நாட் டிற்குத் தகுந்தாற்போல் கலை இருக்கும். அவ்வாறு இருந் தால் தான் அது உண்மையான கலை வளர்ச்சிக்கு தருவதாகவும் இருக்கும். டந் பொதிகையினின்று வீசும்தென்றலை இமயத்தினிடத்தில் எதிர்பார்க்க முடியாது. குமரி முனையில் காணும் ஞாயிற்றின் காட்சியை காஷ்மீரத்திலே காணமுடியாது. காவிரியின் விளைச்சலை கங்கை விளைச்சலில் காணமுடியாது. அரேபி யா வின் மணல் வெளியைத் தமிழ்ப் பாலையிலே கூட முடியாது. எகிப்து பேரீச்சை இந்தியாவில் விளையாது. எஸ்கிமோக்கள் குளிர் நாட்டில் வாழும் வகைக்கும் நீக்ரோக் கள் 'உயிர் கொன்று தின்னும் கானலில்' வாழும் முறைக் காண