20 விற்கு வளப்படுத்துகின்றது? இவற்றை நாம் சிந்திக்கத்தான் வேண்டும். ஏன் - நம்முடைய நாட்டிலே, இந்தியத் துணைக் கண்டத்திலே கீழ்நாடுகளிலேயே பொருட் கலை வளர்ச்சியின்றித் தடைப்பட்டுவிட்டது.ஆனால்,மேல் நாட்டிலோ, வாழ்க்கை யோடியைந்த பொருட் கலை (விஞ்ஞானக் கலை) மிகுந்த வளர்ச்சியுற்று வருகின்றது. நம்மிடத்திலோ கற்பனையிலே திகழுங் கலை குவிந்து கிடக்கின் கிடக்கின்றது. மேல் நாட்டவரிடத் திலோ உண்மையிலே திகழுங் கலை சிறந்துள்ளது. இங்கே வாழ்க்கை கெடுகிறது; அடிமை மக்களாய் உள்ளோம். அங்கே வாழ்க்கை உரம் பெறுகிறது ; ஆளும் மக்களா யுள் ளனர். நம் நாட்டிலே கலை செய்த நன்மை என்ன? வருணாசிரமம் அன்றிலிருந்து இன்றுவரை கலையினாலே காப்பாற்றப்படுகின்ற நிலைமையை வெவ்வேறு துறை களிலும் காண்கின்றோம். சமஸ்க்ருதம் தேவமொழி; அத னைப் படிப்பதற்குப் பூதேவர்களான பார்ப்பனர்களுக்குத் தான் உரிமையுண்டு. வேதம் கடவுளால் எழுதப்பட்டது ; சூத்திரர் அதைக்கேட்டுவிட்டாலும் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும். கடவுளைத் தொழ வடமொழியே வேண் டும் ; தமிழில் வேண்டினால் அது அந்தக் கடவுளுக்கும் புரி யாமல் போய்விடும்:- இவை தாமே வருணாசிரமக் கலையின் விளைவுகள்! அந்தக் காலத்துச் செய்தி ஏன் ? இதோ ஒரு சில நாட்களுக்கு முன்னால் காசி இந்து பல்கலைக் கழகத்தில் இந்தப் பழமை, இந்த வருணாசிரமக் கலை, இந்த வைதீகக் கலை, தாண்டவம் ஆடிற்று, மகேஸ் பிரசாத் என்ற காசி சர்வ கலாசாலைப் பேராசிரியரின் புதல்வி குமாரி கல்யாணி தேவி அவர்கள் வேத வகுப்பிலே படிக்க விண்ணப்பித்தனர். ஆனால் அவர் ஓர் பார்ப்பனர் அல்லாதார் என்பதாலும் பெண்பால் என்ற காரணத்தாலும் சேர்க்க மறுத்துவிட்ட னர். மறுத்துவிட்டனர் என்றால் யார் ? யாரோ சில சனா தன சலசலப்புக்காரர்கள் அல்லர். யாரோ சில வைதீகக்
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை