22 இன்னும்,பார்ப்பனன் ஒருவன் பார்ப்பனர் அல்லாத பெண் ஒருத்தியுடன் சேர்ந்து வாழ்ந்து பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளைக்கு அந்தப் பார்ப்பனன் சொத்தில் எந்தவித உரிமையும் இல்லை. ஆனால் பார்ப்பனத்தி ஒருத்தியுடன் பார்ப்பனர் அல்லாதான் ஒருவன் சேர்ந்து வாழ்ந்து அவ ளிடத்தில் குழந்தை பிறக்குமே யானால் அக் குழந்தைக்குத் தந்தை சொத்தில் உரிமை உண்டு. ஏன் இக்குழந்தைக்கு உள்ள சொத்துரிமை அக் குழந்தைக்கு இல்லாமல் போயிற்று? வேறு சாதியல்லவா என்று யாராவது சொல்ல நேர்ந்தால் வேறு சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுகின்ற வர்களுக்குள்ளே தானே இரண்டு குழந்தைகளும் பிறந்தன. ஒரே விதமாகப் பிறந்த இரண்டு குழந்தைகளுள்ளே வேற் றுமை ஏன் ? இது மனுநீதியில் மட்டும் காணப்பட்டால் எனக்குக் கவலையில்லை. இது அந்தக் காலத்துச் சரக்கு' என்று இருந்து விடுவேன். ஆனால் இது கலையிலும் இடம் பெற்றுவிட்டது. கலைமட்டும் அல்ல. இன்றைய நம் வாழ்க் நிலையிலேயும் இடம் பெற்றுவிட்டது. அந்த வாழ்க்கை நிலையை வரம்புகட்டித் தீர்ப்புச்சொல்லி வருகின்ற சட்ட மன்றத்திலும் இடம்பெற்று விட்டது. ஆகவே தான் கவலை என் நெஞ்சைக் கவ்வுகிறது. மற்றுமோர் நீதிகேளுங்கள். சம்புகன் என் சம்புகன் என்ற ஒருவன் சூத்திரச் சாதியானாம். பார்ப்பனச் சிசு ஒன்று அகால மர ணம் அடைய நேரிட்டதை அதன் தந்தை இராமனிடத்தில் கூறினான். அதைக்கேட்ட இராமன் ஏதோ சீக்குப் போலும் என்று கருதினான் இல்லை. புதுவகைக் காய்ச்சலோ என்று ஐயுற்றான் இல்லை. ஏதோ நடக்கக்கூடாதது நடந்ததால் தான் குழந்தை மரணம் நிகழ்ந்தது என்றான். சம்புகன் தவம் செய்வதை அறிந்தான். இந்த தவமே அந்த மரணத்திற்குக் காரணம் என்று சொல்லிச் சம்புகனைச் கொன்றானாமே, இது நீதியா ? இதை, எதுகையும் மோனையும் பவனிவர, பெரு மிதத்தோடு எடுத்துச் சொல்லும் இராமாயணம் கலை யாகுமா? இக்கலை தீட்டும் இந்நீதி நீதியாகுமா?
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/28
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை