பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ரார், தமது வடமொழிப் புலமையையும், பாரதப் பாரா யணத்தையும், வைணவ பக்தியையும் வெளிப்படுத்திக் கொள்ள பாரதம் இயற்றினார். பதினைந்தில் மறுபடியும் சைவ மதச் சார்பாக திருவிளையாடல் புராணங்கள் தோன்றின. அதற்குப்பின், இரண்டு நூற்றாண்டுகள் வரை, எங்கெங்கே கோவில்கள் கட்டப்பட்டாலும், காணப்பட்டாலும், அவற் றிற்கெல்லாம் தலபுராணம் இயற்றினார்கள். முதன் முதலாக மதத்திற்காக-கலையைக் கையாளத் தொடங்கியவர் சீத்தலைச் சாத்தனாரே. அதற்குப் பின் மதக் கருத்து, இலக்கிய உருவம் பெறுவதிலே போட்டி யிடத் தொடங்கிற்று. வாழ்க்கை நோக்கம் கைவிடப் பட்டு, சமய நோக்கம் இலக்கியக் கலையின் அடிப்படையாக ஆனதால்தான், வடநாட்டுக் கதையும் கருத்தும், வடவர் கொள்கையும், வடமொழியும், சிலப்பதிகார காலத்துக்குப் பின்னால் ஆக்கம் பெற இடமேற்பட்டது. அதன் விளைவா கத்தான் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரையில் சீரழியா திருந்த திராவிடம், அதற்குப் பின்பு கலை கெட்டதால் நிலை கெட்டுப் போயிற்று. அதற்கு முன்பு ஆரியத்தை ஏற்காத திராவிடக்கலை, இப்போது ஆரியத்தை அணைத்து அழிவு றத் தொடங்கிற்று. மணிமேகலையிலேயே, வடநாட்டு நிகழ்ச் சிகள்தாம், முற்பிறவி பிற்பிறவி என்று பேசப்படுகின்றன என்று தமிழறிஞர். நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் கள் கூறிச் சென்றனர். மணிமேகலையிலேயே அந்நிலை என்றால் பிறவற்றைக் குறித்துக் கேட்கவும் வேண்டுமோ? ஆகவேதான் கலையிலே மாற்றம் விரும்புகிறவர்கள் பெரிய புராணத்தையும் கம்பராமாயணத்தையும் குறை கூறுகிறார்கள். அவற்றைக் கண்டிக்கும் அறிகுறியாகக் கொளுத்த வேண்டுமென்றும் கூறுகிறார்கள். கொளுத்து வது என்று கூறியவுடனே காட்டு மிராண்டித்தனம் என்று சொல்லத் தோன்றும், சிலருக்கு ! ஆனால், காட்டு மிராண்டிக் காலக் கதையை-காட்டு மிராண்டித்தனத்தைக் கடவுட் தன்மை என்று கருதச் செய்யுங் கலையை - காட்டுமிராண்டித்