பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தனத்தால் அழிக்க முடிந்தால் அது தவறாகாது. ஆனால் கொளுத்துவதாலேயே ஒரு கலையை அழித்துவிட முடியு மென்று நான் நம்பவுமில்லை' கூறவுமில்லை. கொளுத்துவது, வெறுப்பின் அறிகுறி என்றுதான் கொள்கிறேன். மற்றுஞ் சிலர், கம்பராமாயணத்தையும் பெரிய புராணத் தையும் விட தாழ்ந்த கருத்துடைய புராணங்கள் உள்ள போது இவற்றை மட்டும் ஏன் கொளுத்திக் கண்டிக்க வேண் டும் என்று வினவலாம். அவை உள்ளன என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவை, இராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் போல; படித்தவர் முதல் பாமரர் வரை, பணக்காரர் முதல் பராரி வரை அனைவரும் அறிந் தவை அல்ல. இந்த இரண்டு காவியங்களுமே மற்றெல்லாப் புராணங்களையும் விட அதிகமாகப் பொது மக்களிடம் பரவி, அவர்களை மூட நம்பிக்கையிலே அழுத்தி வைக்கக் காரண மாய் உள்ளன. அதுமட்டுமன்றிச் சாதி வேறுபாடும் சமு தாயத் தொல்லையும் கலை என்ற பெயரால் இவற்றால் வளர்க் கப் படுகின்றன. புத்த சமண மதங்களுக்கும் இலக்கியங்கள் இருந்தாலும், அவை இராமாயணமும பெரிய புராணமும் போல் பக்தி நூல்களாகவோ அன்றிப் புரோகித வளர்ச்சிக் கும் உயர்வு தாழ்வு மனப்பான்மைக்கும் வழி செய்யும் நூல்களாகவோ இருக்கவில்லை. பெரும் பான்மையோரிடத் தும் பரவவில்லை. ஆகவேதான், இராமாயணமும் பெரிய புராணமும் கண்டனக்குறி இலக்கியங்களாயினவேயன்றி பிறவற்றில் நாங்கள் கொண்டுள்ள பக்தியாலன்று. நம் நாட்டில் படித்தவர்கள்கூட பெரிய புராணத்தை யும் இராமாயணத்தையும் புண்ணியச் சரித்திரங்களாய்க் கருதிப் படிப்பதையும், அவற்றைப் பக்க நின்று கேட்டா லும் புண்ணியம் என்று கேட்பதையும், மத ஏடுகளாகப் போற்றுவதையும் நாம் காணுகின்றோம். இன்னும் சிலர் அவற்றை அழகிய இடங்களில் வைத்து. பொற்கோலமிட்டுப் பூவும் புகையும் போட்டு, திருவிளக்கும் ஏற்றி வைத்து, கும்பிட்டு வணங்கி, அதன்பின் கதையைத் தொடங்குவை த