27 யும் காணுகிறோம். ஏன் இந்த நிலை, அவை இலக்கியங்க ளாக மட்டு மிருந்தால்? அதற்கு மாறாக அவை, தங்கள் மதக் கருத்தை மக்கள் மனதிலே பதியவைக்கும் நோக்குடை யனவாக இருப்பதினாலன்றோ இந்நிலை ஏற்பட்டது? கம்பராமாயணம், காகுத்தனைக் கடவுளாக்கிற்று. இரா மன் ஓர் மனிதன் ; தவறுகள் பல செய்தவன்; ஆரிய நாட்ட வன். அவனைப்பற்றிய கலை ஆரிய நாட்டுக்குத் தேவையாக லாம். தமிழருக்குத் தேவைதானா? தென்னாட்டான், வீர மிக்கான், அடலேறு அனையான், அஞ்சாத நெஞ்சுரத்தான் இராவணன் இராமனால் இராமனால் கொல்லப்பட்டான் என்பதைக் கலையாக்கியதாலே தமிழருக்கு ஏதேனும் பயன் உண்டா? இராமன், வாலியை மறைந்திருந்து கொன்றவன்; துரோகியாகிய விபீடணனுக்கு அபயமளித்தவன்; சூர்ப்ப நகை, தாடகைபோன்ற பெண்களைப் பெண்கள் என்றும் கருதாமல் மானபங்கப்படுத்தவும் கொலைசெய்யவும் துணிந் தவன்; தன் மனைவியையேகூடச் சந்தேகித்தவன். அவன் அந்நியன், ஆரியன் ; தமிழனுக்குப் புறம்பானவன் மன்று, எதிரியுங்கூட. அவனைக் கைகூப்பித் தொழவேண்டிய அளவிற்குத் தமிழ் மக்களை மானமற்றவர்களாக்கிற்று, கம்பராமாயணம். ஆகவேதான், மானத்தையும் மாண்பையும் சிதைத்த இலக்கியம். சிதைக்குச் செல்லட்டும்; அது கலை யானாலும் கவலையில்லை என்று கூறவேண்டியவர்களானோம். அதுமட்டுமல்ல, சிலப்பதிகாரம் போன்ற நல்ல காப்பியம் மக்களிடத்தே உலவத் உலவத் தடையானதற்குக் காரணம்கூட பக்தியோடு கலந்து புகுத்தப்பட்ட கம்பராமாயணமும் புராணமுமேயாகும். என்பது எங்கள் கருத்து. இதைக் கண்ணுற்றதால்தான், மக்களின் வாழ்க்கை நிலை யிலே மாற்றங் காண கலையிலே, கலை மக்களிடத்தில் கொண் டுள்ள பிடிப்பிலே புரட்சிசெய்ய வேண்டியவர்கள் ஆனோம். பெரிய பெரிய புராணமோ, சைவப் பெருமையைப் பேச வந் தது. ஒவ்வொரு பக்தருக்கும் காட்சியளிக்கத் தவறவில்லை.
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை