30 30 க என்று கூறினாலும் கணவன் தந்தை என்ற உலகியல் உணர்ச் சியைக் கடந்தவர்களுக்கு, இந்த உலகியல் உரிமை மட்டும் எப்படி நியாயமாகும் என்று எண்ணிப் பார்க்க வேண்டு கிறேன். இதுவன்றியும், உலகியல் உணர்வைக் கடந்தவர் களைப்பற்றிக் கதை எழுதிய சேக்கிழார், மனைவி என்ற நினை விழந்த இல்லை யென்னாத இயற்பகை பார்ப்பன வடிவத் திலே வந்த இறைவனுக்கு ஒருத்தியை (இல்லக் கிழத்தியை) அளித்தான் என்றும், பிள்ளையென்ற கருத்திழந்தான், பிள் ளைக் கழுத்தறுக்கத் துணிந்தான் என்றும் ஏன் எழுதவில்லை என்று கேட்கிறேன். இவற்றைத் தெளிவாகக் கூறிவிட்டால், இந்த நாயன்மார்கள் நல்லறிவிழந்தவர்கள் என்று நாட்டினர் நவின்றுவிடுவார்களே என்ற எண்ணத்தாலும் மக்கள் எண் ணவும் நம்பவும் முடியாத - தற்காலச் சைவர்களும் பின் பற்றமுடியாத இந்தக் கதைகளால் சைவத்துக்கும் சிவனுக் கும் ஏற்படக்கூடிய பெருமை கெட்டுவிடுமே என்ற அச்சத் தாலுமே இவ்விதம் சேக்கிழார் "சூழ்ந்து அருளினார்" என்று கருதுவது தவறாகாது - மற்றும் இப்பெரிய புராணம், உலகியல் கடந்தவர் களைப்பற்றிப் பேசுவது என்பதை ஒப்பினாலும், அது உல கியலில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற வாழ விரும்புகின்ற பெருவாரியான மக்களிடத்துப் படிக்கப்படுவானேன், பிரசங் கிக்கப்படுவானேன்? அவ்வாறு நடத்தப்படும் பல கதா பிர சங்கங்களிலும் கலையோ இலக்கியமோ இடம் பெறுவது மில்லை. அதற்கு மாறாக, வாழ்க்கைக்குப் பொருந்தாத கதைமட்டுமே இடம்பெற்று, மக்கள் தங்கள் வாழ்க்கையிலே அவநம்பிக்கை கொள்வதையும், கதைசெய்யும் கூட்டம் மக்க ளிடமிருந்து பயபக்தியோடு பெற்ற காணிக்கையால் வாழ்க் கையிலே வளமும் உற்சாகமும் பெறுவதையும் காண்கிறோம். பெரிய புராணத்திலே கொண்டுள்ள மூ த்திலே கொண்டுள்ள மூட பக்தியின் விளை வு இந்த அளவிற்குச் செல்லுமானால், இந்த நூல் என் பொது மக்களிடம் உலவவேண்டும்? கலையென்று சொல்லி, இந்த வாழ்க்கைக் கொலையைத் தொடர்ந்து நடத்த, பண்டிதர்
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை