பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 திலே, இதற்கு முன்பு இத்தகைய செய்தி இடம் பெற்ற து ண்டா? பாரதத்தில் சூதாட்டம் மட்டுமல்ல - சூதில்- மனிதன் - மனிதனையும், மனைவியையும்கூடப் பந்தயப் பொருளாகவைத்தான், என்ற செய்தி கேட்கப்படுகிறது. து நியாயந்தானா? தமிழரசர்கள் எவரும், தமது நாட்டைத் தமக்கே உரி யது என்று கருதியதும் கிடையாது. மன்னர்கள் மக்களுக் காகவே மக்கள் உரிமையைப் பாதுகாக்கவே பாராளும் உரிமை தமக்கிருக்கிறது என்று கருதினார்கள். அவர்கள் போராடிய செய்தி கேட்கப்படுமேயன்றிச் சூதாடிய செய்தி புறத்திலே கேட்கமுடியாது. ஆனால் இங்கே மன்னர்க ளிடையே சூதாட்டம், அதற்கு 'நாடும்' (ராஜ்யம்) ஒரு பந் தயப் பொருள். அரசன் உருட்டும் இரு சிறிய சூதாடு கருவி கள், பல மக்களுடைய வாழ்க்கையை உருட்டவும் ஒரு அரச னிடமிருந்து மற்றொருவனுக்கு நாடு கைமாறவும் காரணமா யிருந்ததை, பாரத ஆசிரியரும் உணரவில்லை ; வட நாட்டிலே அக்காலத்தே இடம்பெற்ற நாகரித்திலும் இதுபற்றிய நல் லுணர்வு இடம்பெற வில்லை. நள சக்கரவர்த்தியும் சூதாடினான், நாட்டை இழந் தான் ; காரிருளில் கானகத்தில் காரிகையைக் கைவிட்டுக் கால் நீட்டினான் அக்காவலன். நளனோ, தருமனோ சூதாடியது தமிழிலே இடம் பெறுவானேன். இவை நியாயம் என்று எண்ணமுடியுமா வாழ்க்கைக்குப் பயன்படாதது மட்டு மல்ல, வாழ்க்கையை அழிக்கக்கூடிய இத்தகைய கருத்துக் கள் ஆரியத்திலிருந்து தமிழில் நுழைக்கப்பட்டன ஆகவேதான் ஆரியக்கலை வேறு திராவிடக்கலை வேறு, என்று எடுத்துக்காட்ட வேண்டியவர்களானோம். திராவிடக் கலை ஆரியக் கலையின் சேர்க்கையால் கெட்டது என்பதைக் கண்ட போது தான், திராவிடக் கலையைத் தூய்மைப்படுத்தும் தொண்டில் இறங்கினோம். ஆரியக் கலை நீக்கப்பட்டு அழிக் கப்பட்டா லொழிய, தமிழிலக்கியங்கள் பயன்படாதொழியும் என்பதையும் எண்ணிப் பார்த்தோம். ஆகவேதான், இ 3 . , இது