பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அழிக்கப்பட்டால்தான் என்ன என்று கேட்கின்றேன். கலை இப்படிப்பட்ட இழிவான கட்டளைக்கு (இலக்கணத்திற்கு) உள்ளாக நேரிடுமேயானால் அது கலையுமாகாது. கூறுவது கலை இலக்கணமுமாகாது. அதைக் இப்படிப்பட்ட இலக்கணம் இன்னும் இருக்கவேண்டுமா என்று கேட்டால் சிலர், இவைகளைப் பார்த்து யார் கவி பாடுகிறார்கள்? இந்த இலக்கணப்படி எவருமே கவி சாற் றும் முறை இல்லாதபோது இதை ஏன் கலை வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இப்படி எவருக்கும் பயனில் லாத இந்த இலக்கணம் ஏன் படிக்கப்படவேண்டும் என்று கேட்கிறேன். பயனில்லாததுமட்டுமல்ல, பயன்படுத்தப்பட் டால் கலைக்கும் வாழ்வுக்கும் கேடிழைக்கக்கூடிய இக் கலை இருக்கத்தான் வேண்டுமா என்று எண்ணிப் பாருங்கள். நஞ்சுக் கோப்பை எதற்கும் பயன்படாதது மட்டுமல்ல, பெருந் தீங்கை விளைப்பது அதை அழிக்கவேண்டும் என்று கூறினால், எவர்தான் அதனைக் குடிப்பார்கள், எவரும் குடி யாத அதனிடம் ஏனோ வீண் வெறுப்பு என்று கேட்பது நியாயந்தானா? இன்னும் நமது நாட்டுக்கலையிலே உ - ஆணும் - று பெண் ணும் - ஒத்த உரிமை பூண்டு வாழ்ந்ததைக் காண்கிறோம். இன்றோ - ஆரியக் கலையால், ஆணுக்குப் பெண் - உரிமையில் மட்டுமன்றி உணர்ச்சியிலும் அடிமைப்பட்டுள்ள கொடுமை யைக் காண்கிறோம். மண்ணாசை, பொன்னாசை, பெண் ணாசை என்று பேசப்படுவதையும், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருடன் என்ற பழமொழியையும் கேட்கின் றோம். இவையெல்லாம் புராணங்களினாலே புகுந்த புன் மொழிகளாகும். மண்ணையும் பொன்னையும் போல, பெண் ணும், உயிரற்றதா? அன்றி உணர்வற்றதா? அன்றி மாற் றப்படும் பொருள் தானாமா ஆணைப் போலவே, பெண் ணும் ஒருவனைக் காணுமிடத்தில், அவனைப்பற்றி, உணர வும், விரும்பவும், வெறுக்கவும் இடமிருந்தும், உயிரற்ற பொருள்போல் கருதப்பட்டு, மண்ணுக்கும், பொன்னுக்கும்