பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 முடியுமே தவிர, வாழ்க்கையிலே என்ன மாற்றத்தை, உயர்வை அந்தப்படம் விளைவிக்க முடியும். இப்படிப்பட்ட கலைகள் வளர்வதால், துயரடைந்துள்ள மக்களுக்கு, தோல்வியடைந்துள்ள நாட்டிற்கு, சோர்வுற்றுள்ள சமுதா யத்திற்கு ஏதாவது பலனிருக்க முடியுமா? ஆகவே தான் கலையில் வாழ்க்கை நோக்கம் அமையவேண்டும் என்று நாங் கள் வற்புறுத்துகிறோம். கலை வாழ்க்கைக்காகவே என்று கூறுகிறோம். மற்றும் வாழ்க்கையே ஓர் பெருங் கலை. மனித சமு தாயமே, இயற்கையில் வளர்ந்த உயர்ந்த கலை. ஓவியமும் காவியமும், மக்கள் வாழ்க்கையின் தோற்றத்தின், நிழலும், நிறமுமேயாம். அனுபவ அறிஞர். கண்டேகார், "சிறு வயதில், காவியங்கள், ஏடுகளில்மட்டுமேயுள்ளன, இளமை யில் அவை குடும்பத்தில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் ஐம்பது நெருங்க நெருங்க, அநுபவம் வளர வளர, அவை எல்லாச் சின்னஞ்சிறு பொருள்களிலும் காணப்படு கின்றன." என்று கூறியுள்ளதைச் சிந்திக்கும்போது, ளிடத்தில், அவர் தம் வாழ்க்கையிலேயே கலை காணப்படு கிறது என்பதை நாம் உணர முடியும். ‘மக்க மனிதர்கள் என்பவர்களே உயிரோவியங்கள், பேசும் சித்திரங்கள், உணர்ச்சிக் காவியங்கள், உள்ளத்தை மகிழச் செய்யும் உண்மைக் கலைகள், அத்தகைய மனித சமுதாயக் கலை- இந் நாட்டிலே எந்நிலையிலுள்ளது? பிளவுப்பட்டுள்ளது, நோயடைந்துள்ளது, இளமையிலேயே இறந்து வருகிறது. காணச் சகிக்காத கோர உருவத்தில் தோன்றுகிறது. பஞ் சடைந்த கண், பள்ளம் விழுந்த கன்னம், பலமிழந்த கழுத்து, கூடுகட்டிய நெஞ்சு, மூதுகுடன் ஒட்டிய வயிறு, எலும்புக் கை, இடறும் கால், இவைகளை ஒட்டவைத்தது போன்று, எலும்புந் தோலுமாகத் தோன்றும் உடலே இங் குள்ள மனித சமுதாயக் கலையின் நிலை. அந்த நிலை மாற வேண்டுமேயானால், அவர்களின் மனப்பான்மை மாறவேண் டும். விதி,விதி என்று எண்ணிக் கிடக்கும் ஏமாந்த எண்