பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ணம் தொலையவேண்டும். கர்மத்தின் பலன் என்ற பேச்சு ஒழியவேண்டும். குனிந்த உள்ளம் நிமிராதவரையில், விழுந்த முதுகு நிமிர வழியில்லை. ஆகவேதான், அந்த உள்ளத்தை நிமிர்த்தக்கூடிய வாழ்க்கைக் கலை இன்றி யமையாதது என்று கருதுகிறோம். மேல் நாட்டிலே குழந்தை வளர்ப்பு எப்படியிருக் கிறது? நம்முடைய நாட்டிலே எப்படியிருக்கிறது? மேல் நாட்டில் குழந்தைகளே எதிர்காலச் செல்வம் என்று மிகுந்த கவலையுடன் உயர்ந்த முறையில் வளர்க்கப்படுகிறது. அந்தக் குழந்தைகளே, அந் நாட்டு மக்கள் கண்டு கண்டு, கழியே ருவகை கொள்ளும் கலை யுலகமாகத் திழ்கிறார்கள். வாழ்க் கையிலே கலையைக் காணுகிறார்கள். வாழ்க்கை வளத்துடன், வெற்றியையும் உலகெங்கும் நிலைநாட்டுகிறார்கள். நம் நாட்டு மக்களுக்கோ, குழந்தைகளே, எதிர்காலத் தொல்லைகள் என்ற எண்ணம் தோன்றவேண்டிய அளவிற்கு, வாழ்க்கை யிலே உற்சாகம் போய்விட்டது. தங்களுடைய ஏழ்மை நிலைமையாலும், வறுமைக் கொடுமையா லும், பல தாய் தந்தையர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வேண்டிய உணவை யும் ஊட்டமுடியா தவர்களாயுள்ளனர். பாலில்லாமல் வாடு கின்ற பாலகர்கள் அனேகம். பத்துநாள் குழந்தையி லிருந்து பத்துமாதக் குழந்தைவரையில் பாலில்லாமல், இறக் கின்ற குழந்தைகளோ ஏராளம். தாய்ப்பாலுமின்றி, பசும் பாலும் கிடைக்காமல், தொண்டை வரண்டு, வயிறு காய்ந்து சாகின்றன சிசுக்கள். ஆனால் அதேசமயத்தில், பாலசுப்பிர மணியக் கடவுளுக்கும், பத்மநாப சுவாமிக்கும், கல்லிலும், பித்தளையிலும், பாலபிடேகம் குடம் குடமாக. கலை, கட வுள் பக்தி என்ற பெயரால்-பால் இப்படி பாழாக்கப்படு கிறது ஒருபுறத்தில். மற்றொருபுறத்தில், குடிக்கப் பாலில் லாமல், உண்மைக் கலைகள் உயிர்க் கலைகள் நாட்டுச் செல்வச் சிசுக்கள் உயிர்வதை அடைகின்றன. இப்படிப்பட்ட உண் மைக் கலை வாழ்க்கைக் கலை அழிவது நீதிதானா? இளை ஞர்கள் இதனை எண்ணிப் பார்க்கவேண்டும். நமக்கு