2 கலையைப் பல பிரிவாக்கித் தெளிவாகச் சொல்லவேண்டு மானால், ஓவியம் ஒருகலை, காவியம் ஒரு கலை, சிற்பமும், சித்திரமும் கலைகள், இசையும் காட்சியும் கலைகள், என்று கூறலாம். இந்தக் காவியத்தையும் ஓவியத்தையும், சிற்பத் தையும், சித்திரத்தையும் நோக்கவேண்டுமானால், கலைக்கண் கொண்டு நோக்க வேண்டுமென்றும், அவ்வாறு நோக்கு வார்க்கே அதன் சிறப்பும் மதிப்பும் புலப்படும் என்றும் கலை ஞர்கள் கூறுவார்கள். அதனிடத்திலே, கருத்து வளர கண் வளர, அதன் தன்மையை உள்ளம் உணர உணர, ணும் கருத்தும் ஓவியத்தையும் காவியத்தையும், கண்டும் பழகியும் பருகப்பருக கலையின் உயிர்ப் பண் பினை மேலும் மேலும் உணரலாம். ஆனாலும், அந்தப் பழக்கமும்,தேர்ச் சியும் பெறாவிட்டால், கலையை உணரவே முடியாது என்று யாரும் உரைக்க முடியாது. கோபுரத்துப் பொம்மையையோ, பொம்மைக்கால் ஆட்டத்தையோ, பார்த்து மகிழும் எளிய கிராம மக்களும் அதை ஓரளவு விரும்பித்தான் பார்க்கிறார் கள். கலையோ பழங்கலை. பார்க்கிறவர்களோ கலையுணர்வு அற்றவர்கள், கலைஞர் கருத்துப்படி. அங்கும் ஒருவித கலைக் கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. நல்ல முறையிலே இல்லாவிடினும், குறைந்த அளவிலே ஒரு கலையுணர்ச்சியை அங்கே காண்கிறோம். ஆகவே, மனிதன் எவனாயினும், கலையுணர்வுலகிலே நுழையாவிடினும், கலை என்ற பெயரையே கேட்காவிடினும், கலையிலே ஓரளவு கவர்ச்சியுறுகிறான். இது தான் இயற்கையுமாகும். ற கலையென்றால், அதன் கண்ணேயே மூழ்கிவிடுதல் வேண் டும் என்பார்கள் சிலர். மூழ்குவதுபற்றித் தடையில்லை, மூச் சுப் பொறுக்கின்ற அளவிற்குத்தான் தண்ணீரில் மூழ்கி யிருக்க முடிவதுபோல, மனிதன் னையும், தன்னைச் த சூழ்ந்திருப்பதையும் மறந்திருக்கக்கூடிய வரையில் தான் கலை யில் மூழ்கியிருக்கமுடியும். பிற எண்ணந் தோன்றுங்காலை கலையிலே மூழ்கியவன் வெளியில் எழுகிறான். வெளியுலகைக் காண்கிறான், தன்னுணர்வடைகிறான். கலையைக் கண்டு மகிழ் கிறான், கலையினால் பயனடைகிறான்.
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/8
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை