பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

கலைவாணன்

98 கலைவாணன்

குலோத். நான் எங்கே போகச் சொல்லுகிறேன் என்பதைத்

தெரிந்து கொள்ள வேண்டாமா? காவலன்:. ஆமாம். சொல்லுங்கள்! குலோத். நமது அரசவைப் புலவரிடம் போய் நான் இங்கு அவரை வரச் சொன்னதாகச் சொல்லிச் சீக்கிரம் அழைத்துவா.

காவலன்:- உத்தரவு!

(ஒடுகிறான்) குலோத்:- என்ன உள்ளே ஆட்கள் நடமாடும் சப்தம் கேட்கிறதே! எதற்கும் இன்னொரு முறை அழைத்துப் பார்ப்போம். குணவதி குமுதவல்லி!

(மீண்டும் தட்டுகிறான்.) விருத்தம். 'கனவண்டலிடு கனக கொங்கைமிசை நிலவெழுந்து

கனல் சொரியுமென்றளக பந்திமிசை யளிகள் பந்தரிடு மரிவைtர் கடைகடிற மினோ! சூதள வளவெனு

மிளமுளைத் துடியள வளவெணு நுண்ணிடைக் காதளவெனுமாதர் விழிக் கடலமு தனையவர் திறமினோ' குணவதி உனக்கு நேர்ந்த குறைதான்் என்ன என்பதை என்னிடம் சொல்லலாகாதா! மன்னர் மன்னர்களும் வருகை கண்டு எதிர்கொண்டு வணங்கி உபசரிக்கும் உன் நாயகன், சோழ மண்டலத்தின் துணைவன், உன் தரிசனத்திற்காக எத்தனை நேரம் காத்திருக்கிறான்? இந்த இழிவு உன்னையன்றோ சாரும். உன் நாயகன் கால்கள் சோரக் காத்திருப்பது கண்டுமா உன் மனம் இளகவில்லை? - (கூத்தரும் காவலனும் வருகின்றனர்.)

கூத்தர்:- மன்னா! என்ன விஷயம்? ஏன் இத்தனை அவசர

மாக என்னை இங்கழைத்துவரப் பணித்தீர்கள்?