பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

99


குலோத்: விஷயம் என்ன வென்று எனக்கே விளங்கவில்லை. வழக்கப்படி அந்தப்புரத்திற்கு வந்தேன். வழக்கத்திற்கு மாறாக அந்தப்புரக் கதவனைத்தும் அடைபட்டிருக் கிறது. என்ன சொல்லியும் பதிலில்லை. கதவும் திறந்த பாடில்லை.

கூத்தர். அரசியின் இத்தகைய ஊடலுக்குக் காரணம்?

குலோத்:- அதைத் தெரியவும் தீர்க்கவும் தான்ே தங்களை

அழைத்தேன்.

கூத்தர்:- இங்குள்ள பணியாளர்களெல்லாம் எங்கே?

குலோத்:- இல்லை; ஒருவரையும்ே காணவில்லை.

கூத்தர்:- சரி; இருக்கட்டும். நான் அழைத்துப் பார்க்

கிறேன்.

(கதவைத் தட்டி) குணவதி குணவதி மகாராணி! உன் நாயகன் வாயிலில் காத்திருப்பது உனக்கு வருத்தமாயில்லையா? உல கெலாம் வணங்கும் வீரப்ரதாபன் உன் வாயிலில் உன் சேவைக்குக் காத்திருக்க உதாசீனம் செய்வது முறையல்ல.

விருத்தம்.

“நானே யினியுன்னை வேண்டுவதில்லை நளின மலர்த் தேனே கபாடங் திறந்திடுவாய்; திற வாவிடிலோ வானேறனைய விரவிகுலாதிபன் கின்வாசல் வந்தால் தான்ே திறக்கும் கின்கையிதழாகிய தாமரையே!”

(கூத்தர் பாடி முடிந்ததும் குணவதி மீண்டும் ஒரு தாளிடுகிறாள்.)