பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

101

உதயணர்;- (கூத்தரிடம்) ஏன் தாங்களாவது அழைத்துப்

பார்த்தால்....?

கூத்தர்:- எல்லாம் ஆயிற்று. என் குரல் கேட்டதும்

இன்னொரு தாளும் போடப்பட்டு விட்டது.

உதயணர்: ஒகோ! அப்படியா விஷயம்.!

குலோத்:- என்ன, உதயணரே! இதன் காரணம் ஏதேனும்

உமக்குத் தெரியுமா?

உதயனர்:- எனக்கொன்றும் தெரியாது. ஆனால், நீங்கள் சொல்வதிலிருத்து புகழேந்திப் புலவரைச் சிறையிட்டு இருப்பதுதான்் அரசியின் கோபத்திற்குக் காரணமா யிருக்கலாமென்று நினைக்கிறேன். இல்லையானால் நமது சமஸ்தான்ப் புலவர் வேண்டுகோளையும் மறுத் திருக்க மாட்டார்களல்லவா? எதற்கும் புகழேந்திப் புலவரை விடுவித்து அவரைக்கொண்டே அரசியின் கோபத்தைச் சமாதான்ம் செய்வது நலமென நினைக்கிறேன்.

குலோத்:- ஆம். உதயணர் சொல்வதும் உண்மைதான்். அவள் தந்தையின் அபிமானப் புலவரும் அவள் ஆசிரியருமாகிய புகழேந்திப் புலவரைச் சிறையிட்டது தான்் அவளுடைய வருத்தத்திற்குக் காரணமா யிருக்கலாம். ஆம்; அவரை விடுவித்து அவரைக் கொண்டே.........

கூத்தர். வேந்தே இது விபரீத முடிவு அரசத்துரோகியும், நாட்டில் அமைதியைக் குலைக்கும் கலகக்காரனுமாகிய புகழேந்தியை விடுவிப்பது பெரும் ஆபத்தில் முடியும்.

உதயனர்:- அரசே! புலவர் சொல்வதைப்போல், புகழேந்திப் புலவர் அவ்வளவு பயங்கர மனிதராக எனக்குப் புலப்பட